லங்டாங் தேசிய பூங்கா

நேபாளத்தின் முதல் இமயமலை தேசிய பூங்கா

லங்டாங் தேசியப் பூங்கா (Langtang National Park) நேபாள நாட்டில் நிறுவப்பட்ட முதலாவது இமயமலை தேசியப் பூங்காவாகும். நாட்டின் நான்காவது பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இப்பூங்கா கருதப்படுகிறது. லங்டாங் தேசியப் பூங்கா 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 6450 மீட்டர் உயரத்தில் 1710 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது. நுவாகோட் மாவட்டம், ரசுவா மாவட்டம், சிந்துபால்சோக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களுடன் சேர்ந்த மைய இமயமலைப் பகுதியை 26 கிராம சமூகங்கள் சூழ்ந்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் இப்பூங்கா திபெத்திலுள்ள கியோமோலங்மா தேசிய இயற்கைவளம் காப்புப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது [1]. மேற்கு எல்லையில் போட்கோசி மற்றும் திரிசூலி ஆறுகள் உள்ளன. காத்மாண்டு பள்ளத்தாக்கிற்கு வடக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு எல்லை உள்ளது.[2].

லங்டாங் தேசியப் பூங்கா
Langtang National Park
விண்மீன்கள் நிறைந்த லங்டாங் தேசியப் பூங்காவின் இரவு
Map showing the location of லங்டாங் தேசியப் பூங்கா Langtang National Park
Map showing the location of லங்டாங் தேசியப் பூங்கா Langtang National Park
அமைவிடம்நேபாளம்
அருகாமை நகரம்காத்மாண்டு
ஆள்கூறுகள்28°10′26″N 85°33′11″E / 28.1738°N 85.5531°E / 28.1738; 85.5531
பரப்பளவு1,710 km2 (660 sq mi)
நிறுவப்பட்டது1976
நிருவாக அமைப்புதேசியப்பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் துறை

பூங்காவின் உட்புறத்தில் 4300 மீட்டர் உயரத்தில் கோசைன்குண்டா என்ற புனித நீர் ஏரி அமைந்துள்ளது. 6988 மீட்டர் உயர தோர்யி லக்பா என்ற மலை இப்பூங்காவை மேற்கு-கிழக்கு முதல் தென்கிழக்கு வரையென இரண்டாகாப் பிரிக்கிறது. லங்டாங் லிரங் உச்சி இப்பூங்காவின் மிக உயர்ந்த பகுதியாகும் [3]. புனிதமான இமயமலை நிலப்பரப்பின் ஒரு பகுதி லங்டாங் தேசியப் பூங்காவாகும் [4].

வரலாறு

தொகு

1970 ஆம் ஆண்டு லங்டாங் பூங்கா இமயமலை பகுதியில் நிறுவப்பட்ட முதலாவது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் பூங்காவானது காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புக்காக என்று அரசால் முன்னுரிமை அளிக்கப்பட்டது. 1998 இல் 420 சதுரகிலோமீட்டர் (160 சதுர மைல்) இடைப் பரப்பாகவும் இப்பகுதி நீட்டிக்கப்பட்டது [1]. இவ்வமைப்பின் மேலாண்மை வழிகாட்டுதலின்படி காடுகள், வனவிலங்குகள், கலாச்சார வளங்கள் முதலியன முன்னுரிமை பெற்றன. மாற்று எரிசக்தியையும் பிற இயற்கை மூலங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் திட்டங்கள் இயற்றப்பட்டன [5].

காலநிலை

தொகு
லங்டாங் தேசியப் பூங்காவில் சூரிய உதயம்
கோசைன்குண்டா ஏரி

கோடை காலத்தில் தென்மேற்கு பருவமழை கோடை இப்பூங்காவுக்கு மழையைக் கொடுக்கிறது. உயர வேறுபாடு காரணமாக பூங்காவின் முழு பகுதியும் வெப்பநிலையில் பெரிதும் மாறுபடுகிறது. ஆண்டு பனிப்பொழிவு பெரும்பாலும் சூன் முதல் செப்டம்பர் வரையில் கானப்படுகிறது. அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் மற்றும் ஏப்ரல் முதல் மே வரை இங்கு சூடான மற்றும் வெப்பமும் . இரவுகள் குளிரால் நிரம்பியுள்ள சூழலும் நிலவுகிறது. வசந்த காலத்தில், 3,000 மீ (9,800 அடி) உயரத்தில் பொழியும் மழை பெரும்பாலும் பனியாக மாறிவிடும். டிசம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில் சாதாரண நாட்களாகவும் இரவுகளில் உறையும் குளிரும் உள்ளன [6].

தாவரங்கள்

தொகு

ஏறக்குறைய 1000 மிமீ (3,300 அடி) மீ உயரத்திலிருந்து அல்பின் புதர்நிலம் மற்றும் வற்றாத பனிக்கட்டிக்கு கீழே உள்ள உயரமான வெப்பமண்டல காடுகளில் உள்ள 18 வகையான சுற்றுச்சூழல் மண்டலங்களில் 14 வகையான பன்முகத்தன்மை தாவர வகைகள் இங்கிருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன [1].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Bhuju, U. R., Shakya, P. R., Basnet, T. B., Shrestha, S. (2007). Nepal Biodiversity Resource Book. Protected Areas, Ramsar Sites, and World Heritage Sites (PDF). Kathmandu: International Centre for Integrated Mountain Development, Ministry of Environment, Science and Technology, in cooperation with United Nations Environment Programme, Regional Office for Asia and the Pacific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-9115-033-5. Archived from the original (PDF) on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  2. Yonzon, P.; Jones, R.; Fox, J. (1991). "Geographic Information Systems for Assessing Habitat and Estimating Population of Red Pandas in Langtang National Park, Nepal". Ambio 20 (7): 285–288. https://archive.org/details/sim_ambio_1991-11_20_7/page/285. 
  3. Mishra, P. N. (2003). "The Langtang National Park: a proposed first Biosphere Reserve in Nepal". Journal of the National Science Foundation of Sri Lanka 31 (1&2): 333–335. https://jnsfsl.sljol.info/articles/10.4038/jnsfsr.v31i1-2.3045/galley/2437/download/. 
  4. Gurung, C. P.; Maskey, T. M.; Poudel, N.; Lama, Y.; Wagley, M. P.; Manandhar, A.; Khaling, S.; Thapa, G.; Thapa, S.; Wikramanayake, E. D. (2006). "The Sacred Himalayan Landscape: Conceptualizing, Visioning, and Planning for Conservation of Biodiversity, Culture and Livelihoods in the Eastern Himalaya". In McNeely, J. A.; McCarthy, T. M.; Smith, A.; Whittaker, O. L.; Wikramanayake, E. D. (eds.). Conservation Biology in Asia. Kathmandu: Nepal Society for Conservation Biology, Asia Section and Resources Himalaya Foundation. pp. 10–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99946-996-9-5. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
  5. Heinen, J. T. and J. N. Mehta (2000). Emerging Issues in Legal and Procedural Aspects of Buffer Zone Management with Case Studies from Nepal. Journal of Environment and Development 9 (1): 45–67.
  6. Sayers, K., Norconk, M.A. (2008). Himalayan Semnopithecus entellus at Langtang National Park, Nepal: Diet, Activity Patterns, and Resources. International Journal of Primatology (2008) 29: 509–530.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்டாங்_தேசிய_பூங்கா&oldid=3792415" இலிருந்து மீள்விக்கப்பட்டது