லச்சித் பர்பூக்கன்
லச்சித் பர்பூக்கன் (Lachit Barphukan), வடகிழக்கு இந்தியாவின் அசாம் பகுதிகளை ஆண்ட அகோம் பேரரசின் தலைமைப் படைத்தலைவர் ஆவார். மார்ச் 1671ஆம் ஆண்டில் அகோம் பேரரசின் கடற்படைத் தலைவர் லச்சித் பர்பூக்கன் தலைமையில், முகலாயப் பேரரசின் படைத்தலைவர் முதலாம் ராம் சிங்க்கு எதிராக நடைபெற்ற சராய்காட் போரில் முகலாயர்களை கொரில்லா முறை தாக்குதலில் வென்று, குவாகாத்தி நகரத்தை கைப்பற்றினார்.[1] [2][3]இது அகோம் பேரரசுக்கு எதிரான முகலாயர்களின் இறுதிப் போர் ஆகும். அகோம் பேரரசின் பர்பரூவா தகுதியில் படைத்தலைவரான மோமாய் தமுலி என்பவருக்கு பிறந்தவர் லச்சித் பர்பூக்கன்.
-
லச்சித் கல்லறை வளாகத்தில் லச்சித் பவன்
-
லச்சித் பர்பூக்கன் கல்லறை வளாகம், ஜோர்ஹாட் மாவட்டம்
-
இந்திய தேசிய பாதுகாப்பு அகாதமி வளாகத்தில் லச்சித் பர்பூக்கனின் சிலை, கடக்வாசலா
-
தேஜ்பூர் நகரத்தில் லச்சித் பர்பூக்கனின் சிலை
லச்சித் பர்பூக்கன் | |
---|---|
இறப்பு | தற்கால ஜோர்ஹாட், அசாம் (அகோம் பேரரசு) |
சார்பு | அகோம் பேரரசு |
தரம் | அகோம் பேரரசின் தலைமைப் படைத்தலைவர் |
போர்கள்/யுத்தங்கள் | சராய்காட் போர் |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ லச்சித் பர்ஃபூக்கன்: ராட்ஷச வேடமிட்டு முகலாய விரிவாக்கத்தை எதிர்த்துப் போரிட்ட அசாமிய வீரன்
- ↑ Lachit Barphukan at 400: Remembering the naval chief who defeated Aurangzeb’s army and prevented the Mughal conquest of Assam
- ↑ Goswami, Namrata (2014-11-27). Indian National Security and Counter-Insurgency. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-51431-1.