லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில்

லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் (Ladakh Autonomous Hill Development Council, Kargil) (LAHDC Kargil), இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த கார்கில் மாவட்ட மலை வளர்ச்சிப் பணிகளை தன்னாட்சியுடன் நிர்வகிப்பதற்கு இந்த வளர்ச்சிக் குழு 2003-இல் நிறுவப்பட்டது.[1] இதன் தலமையிடம் கார்கில் நகரம் ஆகும்.[2][3]

லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில்
Coat of arms or logo
வகை
வகை
தலைமை
தலைமை நிர்வாக கவுன்சிலர்
பெரோஸ் அகமது கான், தேசிய மாநாட்டுக் கட்சி முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்30 கவுன்சிலர்கள்
Ladakh Autonomous Hill Development Council, Kargil as of March 2020.svg
அரசியல் குழுக்கள்
  ஜம்மு காஷ்மீர் மக்கள் சனநாயகக் கட்சி (2)
  நியமன உறுப்பினர்கள் (4)
தேர்தல்கள்
நேரடித் தேர்தல் மூலம் 26
நியமனம் மூலம் 4
கூடும் இடம்
கார்கில்
வலைத்தளம்
https://kargil.nic.in/lahdc/

இம்மலை மாவட்ட தன்னாட்சி நிர்வாகக் குழுவிற்கான பொதுத் தேர்தல் ஆகஸ்டு 2018-இல் நடைபெற்றது.[4] [5]இத்தேர்தலில் 79.65% வாக்குகள் பதிவானது.[6]தேர்தலில் வென்ற இடங்களில் வென்ற தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கூட்டணியின் தேசிய மாநாட்டு கட்சியின் உறுப்பினர் மாவட்டத் தலைமை நிர்வாகக் கவுன்சிலராக பெரோஸ் அகமது கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாறுதொகு

லடாக் பிரதேச மக்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் கவுன்சில் சட்டம், 1995-இன் படி, 2003-இல் கார்கில் மாவட்ட வளர்ச்சிக்கு லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் அமைக்கப்பட்டது.[7]

அதிகாரங்கள்தொகு

தன்னாட்சி மலைக் குழுக்கள் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, பொருளாதார வளர்ச்சி, கல்வி, நிலப் பயன்பாடு, வரி விதிப்பு, உள்ளாட்சி மற்றும் ஊராட்சி ஆளுகைத் திறன் மேம்பாடு விரித்து கொள்கை முடிவு எடுத்தல், ஊராட்சி ஒன்றியங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் முக்கியப் பணியாகும்.[8]லடாக் ஒன்றியப் பகுதியின் துணை-நிலை ஆளுநர், இப்பகுதியில் சட்டம் & ஒழுங்கு, நீதிமன்றம், கல்லூரி & பல்கலைகழகங்கள், தொலைதொடர்பு வசதிகளை நிர்வகிப்பார்.

தன்னாட்சிக் குழுதொகு

தன்னாட்சி குழு 30 கவுன்சிலர்கள் கொண்ட அமைப்பாகும். இதில் 26 கவுன்சிலர்கள் தேர்தல் முறையில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். 4 நியமன உறுப்பினர்கள் லடாக் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படுவர். [9]தன்னாட்சி அமைப்பின் நிர்வாகக் குழுவில் தலைமை நிர்வாக கவுன்சிலர் மற்றும் 4 பிற நிர்வாகக் க்வுன்சிலர்கள் இருப்பர்.[10]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Bhan, Mona. The Hill Council and the Healing Touch policy. Routledge Contemporary South Asia Series. பக். 63. https://books.google.com/books?id=wZTDAAAAQBAJ&pg=PA215&lpg=PA215&dq=Contents+in+Counterinsurgency,+Democracy+and+the+politics+of+Identity+in+India&source=bl&ots=JXGl7o4A5a&sig=I7Ra_ODLlpal5lSvUEl323zIUZo&hl=en&sa=X&ei=ygX7Us75FIePrQfazYFo&ved=0CD4Q6AEwBA#v=onepage&q=Contents%20in%20Counterinsurgency%2C%20Democracy%20and%20the%20politics%20of%20Identity%20in%20India&f=false. 
  2. "LAHDCK – Ladakh Autonomous Hill Development Council, Kargil | District Kargil, Government of Jammu & Kashmir | India".
  3. https://indiacode.nic.in/bitstream/123456789/4912/1/ladakh_autonomous_hill_development_council_act%2C_1997.pdf
  4. Kargil LAHDC polls Results
  5. "Archived copy". 17 செப்டெம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  6. "3rd General LAHDCK Election – 2013". 17 செப்டெம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  7. Bhan, Mona. The Hill Council and the Healing Touch policy. Routledge Contemporary South Asia Series. பக். 63. https://books.google.com/books?id=wZTDAAAAQBAJ&pg=PA215&lpg=PA215&dq=Contents+in+Counterinsurgency,+Democracy+and+the+politics+of+Identity+in+India&source=bl&ots=JXGl7o4A5a&sig=I7Ra_ODLlpal5lSvUEl323zIUZo&hl=en&sa=X&ei=ygX7Us75FIePrQfazYFo&ved=0CD4Q6AEwBA#v=onepage&q=Contents%20in%20Counterinsurgency%2C%20Democracy%20and%20the%20politics%20of%20Identity%20in%20India&f=false. 
  8. "India". Allrefer country study guide. 21 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 August 2006 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Leh - Roof of the World..." leh.nic.in. 2010-08-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  10. https://ladakh.nic.in/ladakh-autonomous-hill-development-council-leh/

வெளி இணைப்புகள்தொகு