இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்

இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள் (Autonomous Administrative of India) இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணை இந்திய மலைவாழ் பழங்குடி மக்களின் பண்பாடு, நாகரீகம், மொழி மற்றும் பொருளாதார அமைப்புகளைக் காத்திட வேண்டி, பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், மாநிலத்திற்குள், மாவட்டத் தன்னாட்சி நிர்வாகக் குழுக்களை அமைக்கும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தன்னாட்சி மாவட்ட நிர்வாகப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் இரண்டும் உள்ளது.

இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்
வடகிழக்கு இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்

தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிகாரங்கள் மற்றும் திறன்கள்

தொகு

நிர்வாகம் மற்றும் சட்டமியற்றும் அதிகாரங்கள்

தொகு

இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணையில் கூறியுள்ளவாறு, மாவட்டத் தன்னாட்சிக் குழுக்கள் கீழ்கண்ட விடயங்களில் சட்டம் மற்றும் விதிகள் இயற்றும் அதிகாரம் கொண்டுள்ளது:[1]

 • நில நிர்வாகம்
 • காடுகள் மேலாண்மை
 • நீர் ஆதாரங்கள்
 • வேளாண்மை மற்றும் பயிரிடுதல்
 • கிராமக் குழுக்களை அமைத்தல்
 • பொது சுகாதாரம்
 • துப்புரவுப் பணி
 • கிராம மற்றும் நகர அளவில் கொள்கை வகுத்தல்
 • மரபு வழியான கிராம நாட்டாண்மை மற்றும் தலையாரிகளை நியமித்தல் கிராமத் தலைவர்களை நியமித்தல்
 • வாரிசுரிமை சொத்துகள் (Inheritance of property)
 • திருமணம் மற்றும் மணவிலக்கு (Marriage and divorce)
 • சமூகச் சடங்குகள்
 • கடன் வழகுதல் மற்றும் காட்டுப் பொருள் வணிகம்
 • சுரங்கம் மற்றும் கனிமங்கள்

நீதிமன்ற அதிகாரங்கள்

தொகு

மாவட்ட தன்னாட்சிக் குழுக்களுக்கு மலைவாழ் பழங்குடி மக்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கு தனி நீதிமன்றங்கள் அமைக்க அதிகாரம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுக்கு கீழ் சிறைதண்டணை வழங்க அதிகாரம் உள்ளது.

வரிவிதிப்பு மற்றும் வருவாய்

தொகு

மாட்டத் தன்னாட்சிக் குழுக்கள் பள்ளி மற்றும் சாலைகளை பராமரிக்க சுங்கக் கட்டணம், சந்தைக் கட்டணம், மாவட்ட நுழைவுக் கட்டணம், படகுச் சவாரிக் கட்டணம், சாலைக் கட்டணம் தொழில்வரி, சொத்து வரி போன்ற வரிகளும், கட்டணங்களும் விதிக்க அதிகாரம் கொண்டுள்ளது.

தன்னாட்சிக் குழுக்கள் பட்டியல்

தொகு
மாநிலம் / ஒன்றியப் பகுதி தன்னாட்சிக் குழுக்கள் தலைமையிடம் மாவட்டம் / வருவாய் வட்டம்
அசாம் போடோலாந்து கோக்ரஜார் கோகராஜார் மாவட்டம், சிராங் மாவட்டம், பாக்சா மாவட்டம், உதல்குரி மாவட்டம்
தியோரி தன்னாட்சிக் குழு நாராயண்பூர் நாராயண்பூர் மாவட்டம்
திமா ஹசாவ் தன்னாட்சிக் குழு ஹாபலாங் திமா ஹசாவ் மாவட்டம்
கர்பி அங்லோங் தன்னாட்சிக் குழு திப்பு மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்
தேமாஜி தன்னாட்சிக் குழு தேமாஜி தேமாஜி மாவட்டம்
ரப்பா ஹசோங் தன்னாட்சிக் குழு |ரப்பா ஹசோங் தூத்னோய் காமரூப கிராமிய மாவட்டம், கோவால்பாரா மாவட்டம்
சோனாவால் கச்சாரி தன்னாட்சிக் குழு திப்ருகார்
தெங்கல் கச்சாரி தன்னாட்சிக் குழு டிட்டாபார்
திவா தன்னாட்சி க் குழு மரிகாவன்
லடாக் ஒன்றியப் பகுதி லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே லே லே மாவட்டம்
லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில் கார்கில் கார்கில் மாவட்டம்
மணிப்பூர் சந்தேல் தன்னாட்சி மாவட்டக் குழு சந்தேல் சந்தேல் மாவட்டம்
சுராசாந்துபூர் தன்னாட்சி மாவட்டக் குழு சுராசாந்துபூர் சுராசாந்துபூர் மாவட்டம்
சதர் மலைகள் தன்னாட்சி குழு கங்போக்பி கங்போக்பி மாவட்டத்தின்]] சைது, சைக்குல் தாலுக்காக்கள் மற்றும் சதர் மலைகள்
சேனாபதி தன்னாட்சி மாவட்டக் குழு சேனாபதி சேனாபதி மாவட்டம்
தமெங்கலாங் தன்னாட்சி மாவட்டக் குழு தமெங்கலாங் தமெங்கலாங் மாவட்டம்
உக்ருல் தன்னாட்சி மாவட்டக் குழு உக்ருல் உக்ருல் மாவட்டம்
மேகாலயா காரோ மலைகள் தன்னாட்சிக் குழு துரா கிழக்கு காரோ மலை மாவட்டம், மேற்கு காரோ மலை மாவட்டம், தெற்கு காரோ மலை மாவட்டம், தென்மேற்கு காரோ மலை மாவட்டம், வடக்கு காரோ மலை மாவட்டம்
ஜெயந்தியா மலைகள் தன்னாட்சிக் குழு ஜோவாய் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம், மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
காசி மலைகள் தன்னாட்சிக் குழு சில்லாங் மேற்கு காசி மலை மாவட்டம், தென்மேற்கு காசி மலை மாவட்டம், ரி-போய் மாவட்டம்
மிசோரம் சக்மா தன்னாட்சிக் குழு கமலாநகர் லாங்தலாய் மாவட்டத்தின் சக்மா வட்டம்
லாய் தன்னாட்சிக் குழு லாங்தலாய் லாங்தலாய் மாவட்டத்தின் சங் வட்டம்
மாரா தன்னாட்சிக் குழு சியாகா சாய்ஹா மாவட்டத்தின் சியாகா வட்டம், திப்பா வட்டம்
திரிபுரா திரிபுரா பழங்குடிகள் தன்னாட்சிக் குழு குமுலுங்
மேற்கு வங்காளம் கூர்க்காலாந்து டார்ஜீலிங் டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு