லட்சுமி கிருஷ்ணமூர்த்தி

இந்திய விடுதலைப்போராட்ட வீரர், பதிப்பாளர்

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி ((1 ஆகத்து 1925 – 12 சூன் 2009) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும் பதிப்பாளரும் ஆவார். இவர் தந்தை, விடுதலைப்போராட்ட வீரரும் காங்கிரசு கட்சித் தலைவர்களில் ஒருவருமான சத்தியமூர்த்திக்கு ஆவார்.[1] கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை 1943 ஏப்ரல் 23ஆம் நாள்[2] மணந்தார். [3] சென்னை தணிகாசலம் தெருவில் புக்வெஞ்சர், வாசகர் வட்டம் ஆகிய பதிப்பகங்களை நடத்தினார். [4]

அரசியல்

தொகு

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி 1964 முதல் 1970 வரை காங்கிரசு சார்பில் தமிழ்நாடு சட்டமேலவையில் உறுப்பினராக இருந்தார். 1977இல் ஜனதா சார்பில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். [1]

எழுத்தாளர்

தொகு

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி கல்கி, சுதேசமித்திரன், இந்து இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது "ஐந்தாவது சுதந்திரம்" என்னும் நூலை சக்தி வை. கோவிந்தன் தனது சக்தி காரியாலத்தின் வழியாக வெளியிட்டார். கணவரோடு இணைந்து கே.எம்.பணிக்கரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார்.[2]

தொகுப்பாளர்

தொகு

சத்தியமூர்த்தியின் கடிதங்களைத் தொகுத்து இரண்டு பகுதிகளாக வெளியிட்டார்.[2]

வாசகர் வட்டம்

தொகு

1965ஆம் ஆண்டில் வாசகர் வட்டம் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி[5] 45 நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

வ. எண் நூலின் பெயர் நூலாசிரியர் மொழிபெயர்ப்பாளர் ஆண்டு குறிப்பு
01 சோக்ரதர் சி. ராஜகோபாலாச்சாரியார் 1965 வாசகர் வட்டத்தின் முதல் நூல்
02 அம்மா வந்தாள் தி. ஜானகிராமன்
03 பழி என்னும் கோளம் மொழிபெயர்ப்பு
04 அண்டைவீட்டார் பி. கேசவதேவ் "அயல்கார்" என்னும் மலையாளப் பரிசு நாவல்
05 அக்கரை இலக்கியம் மொழிபெயர்ப்பு
06 சிறிது வெளிச்சம் கு. ப. ராஜகோபாலன்
07 வ. ரா. வாசகம்
08 இதோ தேவன்
09 குறுநாவல் தொகுப்பு கிரா & சார்வாகன்
10 நடந்தாய் வாழி காவேரி தி. ஜானகிராமன், சிட்டி 1971
11 பயண இலக்கியம்
12 கம்போடியா
13 புத்ரா லா. ச. ராமாமிர்தம்
14 மாயத்தாகம் ஆர். சண்முகசுந்தரம்
15 பள்ளிகொண்டபுரம் நீல. பத்மநாபன் 1975
16 நேற்றிருந்தோம் கிருத்திகா
17 புனலும் மணலும் ஆ. மாதவன்
18 ஆத்மாவின் ராகங்கள் நா. பார்த்தசாரதி
19 வேள்வித்தீ எம். வி. வெங்கட்ராம்
20 கோபல்ல கிராமம் கி. ராஜநாராயணன்
21 தமிழர் பண்பாடும் வரலாறும் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி சிட்டி
22 வாழ்க்கை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு
23 அறிவின் அறுவடை லெஸ்டர் ப்ரஷன் சிட்டி
24 இன்றைய தமிழ் இலக்கியம்
25 அபிதா லா. ச. ராமாமிர்தம் 1969
26 மண்ணில் தெரியுது வானம் ந. சிதம்பர சுப்பிரமணியம் 1969 மே வாசகர் வட்டம் - 25ஆவது நூல்
27 பூனைக்கண் திரிவேணி 1969 வாசகர் வட்டம் - 26ஆவது நூல், கன்னடத்திலிருந்து மொழிபெயர்ப்பு
28 சாயாவனம் சா. கந்தசாமி 1966 திசம்பர் (வாசகர் வட்டம் - 27ஆவது நூல்) [6]
29 தமிழில் உரைநடை தி. ஜ. ரங்கநாதன் 1969 வாசகர் வட்டம் 28ஆவது நூல்
30 எல்லைக்காவல் வாசகர் வட்டம் 30ஆவது நூல்
31 குயிலின் சுருதி ந. பிச்சமூர்த்தி 1969
32 வேரும் விழுதும் க. சுப்பிரமணியம் 1969
33 இந்திய ஓவியம் மே.சு.இராமசுவாமி 1972 வாசகர் வட்டம் - 33ஆவது நூல்
34 கடலோடி நரசய்யா 1972 சூலை (வாசகர் வட்டம் - 34ஆவது நூல்)
35 இந்துமத நோக்கு டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு
36 போதையின் பாதையில் பி.ஜி.எல்.சாமி
37 எட்வின் கண்ட பழங்குடிகள்
38 அற்பஜீவி விஸ்வநாத சாஸ்திரி தெலுங்கு
39 மன்னும் இமயமலை ஆலுவாலி ஆங்கிலம்
40 அரையும் குறையும் மோஹன் ராகேஷ் இந்தி
41 யாவரும் கேளிர் டாகடர் நாகசாமி ஆங்கிலம்
42 விஞ்ஞானத்தின் புதிய எல்லைகள் 1965
43 வீணையே தனம்!
44 காசளவில் ஓர் உலகம் சுஜாதா வாசகர் வட்டத்தின் கடைசி நூல் - 45ஆவது நூல்

அறிவித்து வெளிவராத நூல்கள்

தொகு
  1. ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன - ஜெயகாந்தன் (நாடகம்), 1969

செய்திமடல்

தொகு

வாசகர் வட்டம் சார்பாக் ஒவ்வொரு நூல் வெளிவந்ததும் "வாசகர் மடல்" என்னும் செய்தி இதழை வெளியிட்டார். [5]

நூலகம் இதழ்

தொகு

கவிஞர் குயிலன் நடத்திய "நூலகம்" என்னும் இதழை வாசகர் வட்டத்தின் வழியாக சிறிதுகாலம் வெளியிட்டார்.[5] இவ்விதழிற்கு சென்னை பச்சையப்பன் கல்லூரி நூலகர் பா. பெருமாள் ஆசிரியராக இருந்தார். இவ்விதழில் வே. தில்லைநாயகம், அ. திருமலைமுத்துசுவாமி ஆகியோரைப் போன்ற நூலகவியலாளர்கள் கட்டுரை எழுதினர்.

மரணம்

தொகு

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி 2009 சூன் 12 ஆம் நாள் மரணமடைந்தார். கிருஷ்ணமூர்த்தி 2011 மார்ச் 06ஆம் நாள் மரணமடைந்தார். இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள் உள்ளனர். [2]


சான்றடைவு

தொகு