லயா (நடிகை)
லயா (Laya) (பிறப்பு அக்டோபர் 21,1981)[1] ஓர் முன்னாள் இந்திய நடிகையும், குச்சிப்புடி நடனக் கலைஞரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களிலில் பணி புரிகிறார். ஒரு சில மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் தமிழகத் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றுகிறார். முதலில் பத்ரம் கொடுக்கு (1992) படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். பின்னர் சுயம்வரம் (1999) படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.[1][2] புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஸ்டார் 2000 போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றியாளர்களை பரதேசி திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டனர். மேலும் அந்த படத்திற்காக நந்தி விருதுகளில் சிறப்பு நடுவர் விருதையும் பெற்றார். மனோகரம் (2000) மற்றும் பிரேமிஞ்சு (2001) படங்களுக்காக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான நந்தி விருதுகளை வென்றார்.[1][3][4]
லயா | |
---|---|
பிறப்பு | 21 அக்டோபர் 1981 விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1992–2010 |
வாழ்க்கைத் துணை | கணேஷ் கோர்டி (தி. 2006) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுலயா, அக்டோபர் 21,1981 அன்று ஆந்திராவின் விசயவாடாவில் ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1] விசயவாடா, நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைப் பயின்றார்.[1] இவரது தாயார் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக இருந்தார். இவரது தந்தை ஒரு மருத்துவர்.[1] பள்ளி நாட்களில், இவர் மாநில அளவிலான சதுரங்க வீரராக இருந்தார்.[1] ஐதராபாத் சென்று, 50 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் [1].[1] 2006 இல் டாக்டர் கணேஷ் கோர்டி என்பவரை மணந்து கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலசில் குடியேறினார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Nagabhairu, Subbarao (21 October 2022). "Laya: అభినయ 'లయ' విన్యాసాలు!" (in தெலுங்கு). NTV. பார்க்கப்பட்ட நாள் 11 November 2022.
- ↑ "నటి లయ, ప్రగతి కూతుర్లను చూశారా?.. ఫోటోస్ వైరల్". ETV Network (in தெலுங்கு). 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 11 November 2022.
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh (in Telugu). பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "'Preminchu', best film for 2001". தி இந்து. 20 October 2002.[தொடர்பிழந்த இணைப்பு]