லலிதா பாபர்

லலிதா பாபர் (Lalita Babar, 2 சூன் 1989) இந்திய நீள்தொலைவு ஓட்டக்காரர். மகாராட்டிரத்தின் சத்தாரா மாவட்டத்திலுள்ள சிற்றூரொன்றில் பிறந்தவர். இவர் பெரும்பாலும் 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இந்தப் போட்டியில் தற்போதைய இந்திய தேசிய சாதனையாளராகவும் ஆசியப் போட்டிகளில் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளவராகவும் விளங்குகின்றார்.

லலிதா பாபர்
2016 ஒலிம்பிக்கில் லலிதா பாபர்
தனிநபர் தகவல்
முழு பெயர்லலிதா சிவாஜி பாபர்
தேசியம்இந்தியர்
பிறப்பு2 சூன் 1989 (1989-06-02) (அகவை 35)
மோகி, சத்தாரா, மகாராட்டிரம், இந்தியா
உயரம்1.66 மீ (5அடி 5½அங்)
எடை50 கிலோ (110 பவுண்டு)
விளையாட்டு
விளையாட்டுதட கள விளையாட்டுக்கள்
நிகழ்வு(கள்)3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)9:19.76 (இரியோ டி செனீரோ 2016) தே.சா
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகள விளையாட்டுக்கள்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 இஞ்சியோன் 3000 மீ பலதடை ஓட்டம்
ஆசிய தடகளப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 வுகன் 3000 மீ பலதடை ஓட்டம்
13 ஆகத்து 2016 இற்றைப்படுத்தியது.

இந்தியத் தொழில் வாணிகக் கழகங்களின் கூட்டமைப்பும் இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமும் இணைந்து 2015ஆம் ஆண்டில் ஒருங்கிணைத்த ஆண்டின் சிறந்த விளையாட்டாளர் விருதினைப் பெற்றுள்ளார்.[1] இவருக்கு ஆங்கிலக்க பதக்கத் தேடல் நிறுவனம் ஆதரவளித்து வருகின்றது.

போட்டிகளில் சாதனை

தொகு
ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு குறிப்புகள்
  இந்தியாவின் சார்பாக
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இஞ்சியோன் இரண்டாவது 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் 9:35.37
2015 ஆசிய தடகளப் போட்டிகள் வுகான் முதலாவது 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் 9:34.13
2015 உலக தடகள வாகையர் போட்டிகள் பெய்ஜிங் 8வது 3000 மீட்டர்கள் பல தடை ஓட்டம் 9:29.64
2016 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இரியோ டி செனீரோ 10வது 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் 9:22.74

மேற்சான்றுகள்

தொகு
  1. "India Sports Awards: Lalita Babar named Sports Person of the Year". The Indian Express. 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதா_பாபர்&oldid=2721002" இலிருந்து மீள்விக்கப்பட்டது