லலிதா லெனின்
லலிதா லெனின் (Lalitha Lenin)(மலையாளம்: ലളിത ലെനിന് ; பிறப்பு 17 சூலை 1946, திருதல்லூரிர், திருச்சூர், கேரளா) என்பவர் இந்தியாவினைச் சார்ந்த மலையாள மொழிக் கவிஞர் ஆவார்.
அறிமுகம்
தொகுகே.கே. லலிதா பாய் என்பது லலிதா லெனினின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். இவர் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார். இவர் கேரள பல்கலைக்கழகத்தின் பேரவை மற்றும் கல்விக் குழு, கேரளா சாகித்திய அகாடமி பொதுக் குழு, ஜான்சிக்ஷன் சன்ஸ்தான் மேலாண்மை வாரியம், மாநில குழந்தைகள் இலக்கிய நிறுவனம், மாநில வள மையம், கேரள மாநில தொடர் கல்வி மையக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் மாநில மொழிகள் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுலலிதா லெனின் கேரளாவின் திருச்சூரில் திரிதல்லூரில் 1946இல் பிறந்தார். இவர் பன்னாட்டு விவகாரங்கள் குறித்த கட்டுரைகளை எழுதும் எழுத்தாளரும் கட்டுரையாளருமான கே. எம். லெனினை மணந்தார். இவரது மகன் அனில் லாலே மற்றும் மருமகள் பிதுஷி லாலே இருவரும் வழக்கறிஞர்களாக மும்பையில் பணியாற்றினர்.
பின்னணி
தொகுலலிதா லெனின் கேரளப் பல்கலைக்கழகத்தில் வேதியியல், கல்வி மற்றும் நூலக அறிவியலில் பட்டம் பெற்றார்.[2]
இவர் 1976இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை நூலக அறிவியல் படிப்பில் முதல் தரம் பெற்றதற்காக முனைவர் எஸ். ஆர். இரங்கநாதன் தங்கப் பதக்கம் பெற்றார். 1977இல் பேச்சியில் உள்ள கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவி நூலகராகச் சேர்ந்தார். 1979ஆம் ஆண்டில், கேரள பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் விரிவுரையாளரானார். 1990 முதல் 1995 வரை இவர் இந்தத் துறையின் தலைவராக பணியாற்றினார்.[2]
லலிதா இத்துறையின் இணைப் பேராசிரியராக 31 மார்ச் 2006 அன்று ஓய்வு பெற்றார்.
நூல் விளக்கம்
தொகுலெனின் 1971 முதல் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை முக்கிய இதழ்களில் எழுதினார்.
கவிதைத் தொகுப்புகள்
தொகுகரிங்கிலி (1976), கர்கிடவாவு (1995), நமக்கு பிரார்த்திக்கம் (2000), கடல் (குழந்தைகளுக்கான கவிதைகள்) (2000) என்பன இவரின் கவிதை நூல்களாகும்.[3]
நாவல்
தொகுஇவர் மின்னு எனும் குழந்தைகளுக்கான நாவல் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகுமகாபலி எனும் திருவனந்தபுரம் தூர்தர்ஷன் (1987) நிகழ்ச்சிக்கான பாடலை இவர் எழுதியுள்ளார். திருவனந்தபுரம் தூர்தர்ஷனுக்காக 1988ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கேரளாவில் நூலக இயக்கம் பற்றிய ஆவணப்படத்திற்கான திரைக்கதையினை இவர் எழுதினார். திருவனந்தபுரம் தூர்தர்ஷனில் ஓரிடத்தோரிக்கல் (1990) மற்றும் மூக்குத்தியும் மஞ்சதியும் (1998) ஆகிய இரண்டு தொலைக்காட்சித் தொடர்களுக்கான கதையினை இவர் எழுதியுள்ளார். திருவனந்தபுரம் தூர்தர்ஷனில் 1999ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியான அக்ஷரம் (16 தொடர்கள்) லலிதா தொகுத்து வழங்கினார். கைரலி எனும் மலையாளத் தொலைக்காட்சியில் கவிதை அடிப்படையிலான நேரடி நிகழ்ச்சியான மாம்பழம் (2010) நிகழ்வின் நடுவராகப் பணியாற்றினார். புதிய வாயான, எனும் பெண்களுக்கான வாசிப்பு பற்றிய புத்தகத்தினையும் லலிதா எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்புகள்
தொகுபொது நூலகம் சேவனம் (2006) பூதைவாங்கல் என்பன இவர் மொழிபெயர்த்த புத்தகங்களாகும்.
கல்வி வெளியிடு
தொகுநூலகம் மற்றும் தகவல் அறிவியலில் 12 ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.[சான்று தேவை]
விருதுகள்
தொகுலலிதா லெனினின் மின்னு என்ற புத்தகத்திற்கு 1986ஆம் ஆண்டில் சிறுவர் இலக்கியத்துக்கான கேரள சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1996ல் கவிதைக்கான அபுதாபி சக்தி விருதும் 2001ல் கவிதைக்கான மூலூர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Official Web Site of Kerala Library Association". www.keralalibraryassociation.org. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
- ↑ 2.0 2.1 "Lalitha Lenin | Library@Kendriya Vidyalaya Pattom" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
- ↑ Kavishala. "Lalitha Lenin". kavishala.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". www.lalithalenin.in. Archived from the original on 2019-04-11. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.