லலித் பதி
லலித் பதி (Lalit Bhati) (1959 - 4 நவம்பர் 2020) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இராசத்தான் அரசாங்கத்தில் மாநில அமைச்சராகவும் இந்திய தேசிய காங்கிரசில் மூத்த தலைவராகவும் பணியாற்றினார். மாநில காங்கிரசு கமிட்டியில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். [1] [2]
லலித் சங்கர் சிங் பதி | |
---|---|
ललित शंकर सिंह भाटी | |
லலித் சங்கர் சிங் பதி | |
அசுமீர் மாநில அமைச்சர் | |
பதவியில் 1985–1990 | |
குடியரசுத் தலைவர் | மன்மோகன் சிங் |
தொகுதி | அசுமீர் தெற்கு |
அசுமீர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1984–2003 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1959 அஜ்மீர், இராசத்தான், இந்தியா |
இறப்பு | 4-நவம்பர்-2020 (வயது 60-61) ஜவஹர்லால் நேரு மருத்துவமனை, அஜ்மீர், இராசத்தான், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | தேசியவாத காங்கிரசு கட்சி |
பிள்ளைகள் | 3 மகன்கள் - கௌசுதுப் சிங் பதி, சக்ரபானி பதி, சித்தார்த்த பதி |
பெற்றோர் | சங்கர் சிங் பதி |
திரு.பதி,நூலகச் சட்டம் மற்றும் சமுதாயத்தின் அடிமட்ட அளவில் நூலகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். [3]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் 1959 ஆம் ஆண்டு கோலி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சங்கர் சிங் பதி, இந்திய நாட்டின் இராசத்தானில் உள்ள அசுமீர் நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். [4] [5]
இறப்பு
தொகுகோவிட்-19 தொடர்பான காரணங்களால் லலித் பதி 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி, இறந்தார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நவம்பர் 3 அன்று அசுமீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் இரவு இறந்தார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "दिग्गज कांग्रेसी नेता एवं पूर्व मंत्री ललित भाटी की कोरोना से मौत, उनके निधन से सियासी हलके में शोक की लहर". பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ Dev Ankur Wadhawan (5 November 2020). "Ashok Gehlot, Sachin Pilot condole death of senior Congress leader due to coronavirus". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ Herald of Library Science (in ஆங்கிலம்). New Delhi, India. 1999. p. 139.
{{cite book}}
: CS1 maint: date and year (link) CS1 maint: location missing publisher (link) - ↑ "अजमेर के कांग्रेस नेता और पूर्व मंत्री ललित भाटी का निधन". https://www.bhaskar.com/local/rajasthan/ajmer/news/ajmer-congress-leader-and-former-minister-lalit-bhati-dies-127884632.html.
- ↑ "दिग्गज कांग्रेसी नेता एवं पूर्व मंत्री ललित भाटी की कोरोना से मौत, उनके निधन से सियासी हलके में शोक की लहर" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
- ↑ "पूर्व मंत्री ललित भाटी का कोरोना से निधन, सीएम गहलोत और पायलट ने जताया दुख" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.