லவ்லீன் தாண்டன்
லவ்லீன் தாண்டன் (Loveleen Tandan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் நடிப்பு இயக்குநர் ஆவார். இவர் சிலம்டாக் மில்லியனயர் படத்துக்கு டேனி பாயிலின் இணை இயக்குநர் (இந்தியா) ஆவார். மான்சூன் வெட்டிங் (2001) மற்றும் பிரிக் லேன் (2007) உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் நடிப்பு இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் தி நேம்சேக் (2007) படத்தின் காஸ்டிங் ஆலோசகராக இருந்துள்ளார்.
லவ்லீன் தாண்டன் | |
---|---|
பிறப்பு | புது தில்லி |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் ஏ.ஜே.கே. மக்கள் செய்தித் தொடர்பியல் ஆராய்ச்சி மையம் , ஜாமியா மில்லியா இஸ்லாமியா |
அறியப்படுவது | சிலம்டாக் மில்லியனயர் |
ஆலிவுட்டின் வெரைட்டி இதழின் முன்முயற்சியான "ஆண்டில் பெரிய பெரிய தாக்கம் செலுத்திய பெண்களின் அறிக்கையில்" லவ்லீன் இடம்பெற்றுள்ளார். இதில் உலக பொழுதுபோக்கிற்கு பங்களிப்பைச் செய்த சிறந்த பெண்களை விவரித்துள்ளது.
துவக்க வாழ்க்கையும் பின்னணியும்
தொகுலவ்லீன் தாண்டன் இந்தியாவின் புது தில்லியில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை மேட்டர் டெய் பள்ளியில் முடித்தார். லவ்லீன் தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து கல்லூரியில் சமூகவியல் ஆனர்ஸ் படித்தார். கல்லூரி மாணவர் பேரவையின் அரசியலில் தீவிரமாக இருந்த இவர், கல்லூரியின் நிதி அமைச்சராகப் பரிந்துரைக்கப்பட்டார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் எம்.சி.ஆர்.சி.யில் மக்கள் செய்தித் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுலவ்லீன் தாண்டன் தீபா மேத்தா உடன் எர்த் (1998) படத்தில் பணிபுரிந்துள்ளார், [1] பின்னர் மீரா நாயருடன் மான்சூன் வெட்டிங் (2001), வேனிட்டி ஃபேர் (2004), தி நேம்சேக் (2006) ஆகிய மூன்று படங்களில் பணிபுரிந்தார். சாரா கவ்ரோன் மோனிகா அலியின் புதினத்தைத் தழுவி அதே பெயரில் அதாவது பிரிக் லேன் (2007) என்ற பெயரில் எடுத்த படத்திற்கான நடிப்பு இயக்குநராக (ஷாஹீன் பெய்க்குடன்) பணிபுரிந்தார்.
டான்டனின் மிக முக்கியமான திரைப்படப் பணி சிலம்டாக் மில்லியனயர் (2008), அதில் இவர் துவக்கத்தில் நடிப்பு இயக்குனர்களில் ஒருவராக இருந்தார் (லண்டனில் இருந்து கெயில் ஸ்டீவன்ஸ் நடிப்பை ஒருங்கிணைத்தார்) ஆனால் படத்தின் தயாரிப்புப் பணியின் போது, இவரின் குறிப்பிடதக்க பணியினை ஆங்கீகரிக்கும் வகையில் டேனி பாயிலால் "இணை இயக்குநராக (இந்தியா) நியமிக்கப்பட்டார்.
இந்தத் திரைப்படம் எட்டு அகாதமி விருதுகள், ஐந்து விமர்சகர்கள் தேர்வு விருதுகள், நான்கு கோல்டன் குளோப்ஸ், ஏழு பாஃப்டா விருதுகளைப் பெற்றது. படத்தின் இணை இயக்குனராக தாண்டனின் பணி நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் ஆன்லைன் விருதுகளால் (NYFCCO விருதுகள்) அங்கீகரிக்கப்பட்டது, இது "டானி பாயில் வித் லவ்லீன்.
திரைப்படவியல்
தொகுஇயக்குநர்
தொகு- சிலம்டாக் மில்லியனயர் (2008) – இணை இயக்குநர் (இந்தியா)
காஸ்டிங் இயக்குநர்
தொகு- சிலம்டாக் மில்லியனயர் (2008)
- தந்தூரி லவ் (2008)
- பிரிக் லேன் (2007)
- மைகிரேசன் (2007)
- வேனிட்டி ஃபேர் (2004)
- மான்சூன் வெட்டிங் (2001)
காஸ்டிங் ஆலோசகர்
தொகு- தி நேம்சேக் (2006)
பிற துறை
தொகு- எர்த் (இந்திய தலைப்பு: 1947 ) (1998) - தயாரிப்பு உதவியாளர்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லவ்லீன் தாண்டன்
- Slumdog Millionaire (archived 2009)