லவ் கப்பன்ஸ்

லவ் கப்பன்ஸ் (Love Happens) என்பது பிரண்டன் காம்ப் இயக்கத்தில் ஏரோன் எக்கார்ட், ஜெனிபர் அனிஸ்டன் நடிப்பில் 2009 இல் வெளியாகிய ஓர் காதல் நாடகத் திரைப்படம். இது செப்டம்பர் 18, 2009 அன்று வெளியாகியது.

லவ் கப்பன்ஸ்
Love Happens
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிரண்டன் காம்ப்
தயாரிப்புஸ்கொட் ஸ்டப்பர்
மைக் தொம்சன்
கதைஸ்கொட் ஸ்டப்பர்
மைக் தொம்சன்
இசைகிறிஸ்டோபர் யங்
நடிப்புஏரோன் எக்கார்ட்
ஜெனிபர் அனிஸ்டன்
பிரான்சஸ் கொன்ரோய்
டான் பெக்லர்
மார்டின் சீன்
யூடி கிரீர்
ஒளிப்பதிவுஎரிக் அலன் எட்வாட்ஸ்
படத்தொகுப்புடனா இ. யி.
கலையகம்ரிலேடவிட்டி மீடியா
ஸ்கொட் பிக்சர்ஸ்
விநியோகம்யூனிவேர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 18, 2009 (2009-09-18)[1][2]
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$18 மில்லியன்[1][3]
மொத்த வருவாய்$36,088,028[1]

புரூக் ரையன் (ஏரோன் எக்கார்ட்) ஓர் பீஎச்.டி முடித்தவரும், தாங்கள் நேசித்தவரை இழந்தவர்கள் அதனைக் கையாள ஆலோசனை வழங்கும் சுய உதவி நூலின் ஆசிரியரும் ஆவார். அவர் தன் மனைவியை விபத்தில் இழந்து, அந்த வேதனையைக் கையாளும் வழியைப் புத்தகமாக எழுதுகிறார். அவர் தன் மனைவியின் இடமான சீட்டலில் ஓர் பயிற்சிப் பட்டறையை நடத்திக் கொண்டிருக்கும்போது, மலர் விற்பனையாளர் எலோயிசை (ஜெனிபர் அனிஸ்டன்) சந்திக்கிறார். புரூக் தன் சொந்த ஆலோனையைப் பினபற்றாதவராக, தன் மனைவியின் இழப்பினைக் கையாளாதவராக காணப்படுகிறார். முடிவில், பயிற்சிப் பட்டறைக்கு வந்திருந்த கூட்டத்தாரிடம் தன் குற்றத்தைத் தெரிவித்து, தான்தான் வாகனத்தை ஓட்டினாரென்றும், தன் மனைவியல்லவென்றும் தெரிவிக்கிறார். இதனால், தன் மனைவியின் மரணத்திற்கு தானே காரணம் என தன்னைத் தானே குற்றஞ் சாட்டுகிறார். எலோயிஸ் புரூக்கின் மனைவியின் தந்தையுடன் சேர்ந்து, புரூக் மனைவியின் இழப்பிலிருந்து விடுபட உதவுகிறார்.

குறிப்புக்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்_கப்பன்ஸ்&oldid=3256751" இலிருந்து மீள்விக்கப்பட்டது