லாலா ரஞ்சன்

தமிழீழ விடுதலைப் போராளி

லாலா ரஞ்சன் என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் கனகநாயகம் ஞானேந்திரமோகன் (Kanakanayakam Gnanendramohan, 2 செப்டம்பர் 1960 – 13 சூலை 1984) என்பவர் இலங்கையின் தமிழ் போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னணி உறுப்பினராக இருந்தவர்.

Captain
Ranjan Lala
தாய்மொழியில் பெயர்கப்டன் லாலா ரஞ்சன்
பிறப்புக ஞானேந்திரமோகன்
(1960-09-02)2 செப்டம்பர் 1960
இறப்பு13 சூலை 1984(1984-07-13) (அகவை 23)
தொண்டமானாறு, யாழ்ப்பாண மாவட்டம்
செயற்பாட்டுக்
காலம்
?–1984
அமைப்பு(கள்)தமிழீழ விடுதலைப் புலிகள்

ஞானேந்திரமோகன் 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். இவர் யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறைக்கு அருகில் உள்ள ஓடக்கரை பகுதியைச் சேர்ந்தவர். இவரது மருமகளான சிவகௌரி சாந்தமோகன் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் பிரபலமானவரும், விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினரான நெடியவனை (பேரின்பநாயகம் சிவபரன்), மணந்தார்.[1] ஞானேந்திரமோகன் விடுதலைப் புலிகள் புலிகள் புலிகள் இயக்கத்தில் இணைந்து லாலா ரஞ்சன் என்ற இயக்கப் பெயரைப் பெற்றார். இவர் விடுதலைப் புலிகளின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் அதன் தலைவரான வே. பிரபாகரன் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார்.[1]

இவர் குமரப்பா மற்றும் பானுவுடன் இணைந்து இந்தியாவில் பயிற்சி பெற்றார்.[2] கப்டன் லாலா ரஞ்சன் 1984 சூலை 13 அன்று யாழ்ப்பாண மாவட்டம் தொண்டமானாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_ரஞ்சன்&oldid=3942947" இலிருந்து மீள்விக்கப்பட்டது