நெடியவன்
நெடியவன் (Nediyavan) என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் பேரின்பநாயகம் சிவபரன் (28 ஆகத்து 1976) என்பவர் ஒரு இலங்கைத் தமிழ்ப் போராளி ஆவார். இவர் இலங்கைத் தமிழ் போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி உறுப்பினராவார்.
நெடியவன் | |
---|---|
நெடியவன் | |
தாய்மொழியில் பெயர் | நெடியவன் |
பிறப்பு | பே. சிவபரன் 28 ஆகத்து 1976 வட்டுக்கோட்டை, இலங்கை |
மற்ற பெயர்கள் | நெடி |
செயற்பாட்டுக் காலம் | 1994– |
அமைப்பு(கள்) | தமிழீழ விடுதலைப் புலிகள் |
துவக்ககால வாழ்க்கையும் குடும்பமும்
தொகுசிவபரன் 1976. ஆகத்து 28 அன்று வடக்கு இலங்கையின் வட்டுக்கோட்டையில் பிறந்தார்.[1] இவரது குடும்பம் வட்டுகோடை அருகே உள்ள சங்கரத்தாயைச் சேர்ந்தது. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.[2]
சிவபரன், கேப்டன் லாலா ரஞ்சனின் மருமகள் சிவகௌரி சாந்தாமோகனை (கௌரி) 30 அக்டோபர் 2005 அன்று மணந்தார்.[2][3]
பணி
தொகுசிவபரன் 1994 ஆண்டு தனது 18வது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.[2][3] 6 அடி உயரம் கொண்ட சிவபரனுக்கு "நெடியவன்" (உயரமானவன்) என்ற இயக்கப் பெயர் வழங்கப்பட்டது.[2][3] ஆரம்பக் கட்டப் பயிற்சிக்குப் பிறகு நெடியவன் கிட்டுவின் 'காவலர் கல்லூரி'யில் பயின்றார்.[2] இவரைப் புலிகள் அமைப்பு அரசறிவியல் படிப்பதற்காக உருசியாவுக்கு அனுப்பி வைத்தது, ஆனால் படிப்பை முடிக்கவில்லை.[2][3]
பின்னர் நெடியவன் சு. ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் அரசியல் பிரிவில் இணைந்து இலங்கை அரசாங்கத்துடன் பல்வேறு நோர்வே மத்தியஸ்த சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்றார்.[2][3][4] நெடியவன் பின்னர் காஸ்ட்ரோ (வீரகுலசிங்கம் மணிவண்ணன்) தலைமையிலான புலிகளின் சர்வதேச ஒருங்கிணைப்பு மையத்தில் (ஐசிசி) பணியாற்றினார்.[2][3] வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் முன்னணி அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.[2]
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 2006 இல் நோர்வே நாட்டுக்கு நெடியவன் அனுப்பப்பட்டார்.[3][5] 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் மீண்டும் யுத்தம் ஆரம்பமான போது காஸ்ட்ரோ நெடியவனைப் புலிகளின் சர்வதேசப் பிரிவுகளின் பொறுப்பாளராக நியமித்தார்.[3][5] 2009 ஆண்டின் முற்பகுதியில், போர் தீவிரமடைந்த நிலையில், நெடியவனின் முன்னோடியான செல்வராசா பத்மநாதன் புலிகளின் சர்வதேசப் பிரிவின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றார். இந்த நிகழ்வு காஸ்ட்ரோவுக்கு வெறுப்பை உண்டாக்கியது.[3][5] 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் எஞ்சியிருந்த புலிகளின் தலைமைப் பொறுப்பை பத்மநாதன் ஏற்றுக்கொண்டார்.[3][5] பத்மநாதனின் தலைமையை காஸ்ட்ரோ, நெடியவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எதிர்த்தனர்.[3][5] 2009 ஆகத்தில் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெடியவன் விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது, இருப்பினும் இவரது மனைவி கௌரி இதை மறுத்தார்.[6][7][8] நெடியவன் செய்த துரோகத்தின் விளைவே பத்மநாதனின் கைது என்று முன்னாள் இலங்கை தூதர் கே. கொடகே குற்றஞ்சாட்டியுள்ளார்.[9]
நெடியவன் நோர்வேவில் ஒரு மழலையர் பள்ளியில் பணியாற்றினார்.[6] நோர்வேவில் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) தலைவராக இருந்தார்.[7] குறிப்பிடப்படாத காரணங்களுக்காக இவர் 2009 ஆகத்தில் நோர்வே காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.[7]
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தது தொடர்பாக நெடியவன் 2011 மே 18 அன்று நோர்வே காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.[6][10][11] ஒரு டச்சு நீதிபதி மற்றும் ஐந்து அரசு வழக்கறிஞர்களால் இரண்டு நாட்கள் விசாரிக்கப்பட்ட பின்னர் இவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் .[12][13] நோர்வேவில் வாழும் போது வன்முறையில் ஈடுபடவோ அல்லது வன்முறையை ஊக்குவிக்கவோ கூடாது என நெடியவனை காவல் துறையினர் எச்சரித்தனர்.[3] நெடியவன் ஒசுலோவை விட்டு 240 கி.மீ தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்றார்.[3]
2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 424 பேர்களில் நெடியவனும் ஒருவர்.[14] 2014 ஏப்ரலில் நெடியவன் உட்பட 40 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இலங்கை காவல்துறை சர்வதேச கைது வாரண்டுகள் (இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு) பிறப்பித்தது.[12][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SIWAPARAN, PERINBANAYAGAM". பன்னாட்டுக் காவலகம்.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 .
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 .
- ↑ Ferdinando, Shamindra (8 March 2010). "LTTE fund raising in Germany led by cadre trained in Vanni He visited Lanka during CFA, accompanied LTTE 'peace' delegation to Thailand". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/2010/03/08/news1.html.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 .
- ↑ 6.0 6.1 6.2 Sethurupan, N. (20 May 2011). "New LTTE Leader Nediyavan arrested in Norway and held in custody". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2011/05/new-ltte-leader-nediyavan-arrested-in.html.
- ↑ 7.0 7.1 7.2 Jayawardhana, Walter (16 August 2009). "New LTTE leader is questioned by Norwegian Police". The Nation (Sri Lanka). http://www.nation.lk/2009/08/16/news2.htm.
- ↑ "Nediyavan not be new LTTE leader : Nediyavan wife". CNN iReport. 16 August 2009. http://ireport.cnn.com/docs/DOC-314919.
- ↑ Godage, K. (11 August 2009). "KP yes, but it's the LTTE that is in the dock". தி ஐலண்டு (இலங்கை). http://pdfs.island.lk/2009/08/11/p8.pdf.
- ↑ "Nediyawan arrested in Oslo". The Daily Mirror (Sri Lanka). 20 May 2011. http://www.dailymirror.lk/11489/nediyawan-arrested-in-oslo.
- ↑ Bell, Stewart (6 June 2011). "Police discover Sun Sea's link to Norway". National Post. http://news.nationalpost.com/news/canada/police-discover-sun-seas-link-to-norway.
- ↑ 12.0 12.1 "Red notice on Nediyavan: Norway still evaluating the request". The Daily Mirror (Sri Lanka). 25 April 2014. http://www.dailymirror.lk/46290/tech.
- ↑ Kamalendran, Chris (19 June 2011). "Dutch officials question KP and 12 others". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/110619/News/nws_03.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE UNITED NATIONS ACT. No. 45 OF 1968 List of Designated persons, groups & entities under paragraph 4(2) of the United Nations Regulations No. 1 of 20". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary 1854/41: 33. 21 March 2014. http://www.documents.gov.lk/files/egz/2014/3/1854-41_E.pdf.
- ↑ "Nediyawan'sRed Notice Goes Online". த சண்டே லீடர். 27 April 2014. http://www.thesundayleader.lk/2014/04/27/nediyawansred-notice-goes-online/.