லால்குடி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
இலால்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] இலால்குடி ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூவாளூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இலால்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,238 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,344 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 463 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுஇலால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகலங்கநல்லூர்
- அப்பாதுரை
- அரியூர்
- ஆங்கரை
- ஆதிகுடி
- ஆர். வளவனூர்
- ஆலங்குடிமகாஜனம்
- இடையாற்றுமங்கலம்
- எசனகோரை
- கீழப்பெருங்காவூர்
- கீழன்பில்
- கூகூர்
- கொப்பாவளி
- கொன்னைகுடி
- கோமாகுடி
- சாத்தமங்கலம்
- சிறுமயங்குடி
- சிறுமருதூர்
- செம்பரை
- செவந்திநாதபுரம்
- டி. கல்விக்குடி
- டி. வளவனூர்
- தச்சன்குறிச்சி
- தாளக்குடி
- திண்ணியம்
- திருமங்கலம்
- திருமணமேடு
- நகர்
- நத்தம்
- நெய்குப்பை
- நெருஞ்சலக்குடி
- பல்லாபுரம்
- பாம்பரம்சுதி
- புதுக்குடி
- புதூர் உத்தமனூர்
- பெருவளநல்லூர்
- மகிழம்பாடி
- மங்கம்மாள்புரம்
- மணக்கால்
- மருதூர்
- மாங்குடி
- மாடக்குடி
- மேட்டுபட்டி
- வாளாடி
- ஜெங்கமராஜபுரம்