லிங்கார்னிசு
லிங்கார்னிசு | |
---|---|
பெரிய காது பக்கி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேப்ரிமுல்கிடே
|
மாதிரி இனம் | |
லிங்கார்னிசு மேக்ரோடிசு (பெரிய காது பக்கி) கெளல்டு, 1838 |
லிங்கார்னிசு (Lyncornis) என்பது பக்கி குடும்பத்தில் காதுகள் கொண்ட பக்கி பேரினமாகும்.
வகைப்பாட்டியல்
தொகுலிங்கார்னிசு பேரினமானது 1838ஆம் ஆண்டில் இங்கிலாந்து பறவையியலாளர் ஜான் கோல்ட் என்பவரால் லின்கோர்னிசு செர்வினிசெப்சு கோல்ட் 1838 சிற்றினத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்த உயிரலகு இப்போது பெரிய காது பக்கியின் துணையினமாகக் கருதப்படுகிறது.[2] இப்பேரினப் பெயர் பண்டைக் கிரேக்க லுன்க்சு, லுங்கோசு அதாவது "லின்க்சு" மற்றும் ஆர்னிசு எனும் "பறவை" குறிக்கும் சொல்லினை இணைத்துத் தோன்றியது.[3]
சிற்றினங்கள்
தொகுலிங்கார்னிசு பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[4]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
லிங்கார்னிசு தெம்மின்க்கி | மலேசியப் பக்கி | புரூணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து | |
லிங்கார்னிசு மேக்ரோடிசு | பெரிய காது பக்கி | இலங்கை வங்களாதேசம், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து, வியட்நாம் |
இந்த இரண்டு சிற்றினங்களும் முன்னர் யூரோசுடோபோடசு பேரினத்தில் வைக்கப்பட்டன. 2010-இல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் இவை புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட லிங்கார்னிசு பேரினத்திற்கு மாற்றப்பட்டன. பெரிய காது பக்கிக்கும் யூரோசுடோபோடசு பேரினப் பிற உயிரினங்களுக்கும் இடையே பெரிய மரபணு வேறுபாடுகளைக் கொண்டுள்ளதை இந்த ஆய்வு கண்டறிந்தது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gould, John (1838). Icones Avium, or figures and descriptions of new and interesting species of birds from various parts of the globe. Vol. Part 2. London: Self published. Plate 14 and text (plates not numbered).
- ↑ Dickinson, E.C.; Remsen, J.V. Jr., eds. (2013). The Howard & Moore Complete Checklist of the Birds of the World. Vol. 1: Non-passerines (4th ed.). Eastbourne, UK: Aves Press. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9568611-0-8.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ 4.0 4.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Frogmouths, Oilbird, potoos, nightjars". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 January 2022.
- ↑ Han, K.-L.; Robbins, M.B.; Braun, M.J. (2010). "A multi-gene estimate of phylogeny in the nightjars and nighthawks (Caprimulgidae)". Molecular Phylogenetics and Evolution 55 (2): 443–453. doi:10.1016/j.ympev.2010.01.023. பப்மெட்:20123032.