லிசிமோள் பிலிபோசு பாமடைகண்டத்தில்

லிசிமோள் பிலிபோசு பாமடைகண்டத்தில் ( Lizymol Philipose Pamadykandathil ) ஒரு இந்திய பல் மருத்துவத் துறை விஞ்ஞானி ஆவார். இவரது பணி நாரி சக்தி புரஸ்கார் விருதுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, இந்தியாவில் பெண்களுக்கான பிரத்தியேகமான உயரிய விருதாகும்.

லிசிமோள் பிலிபோசு பாமடைகண்டத்தில்
தேசியம் இந்தியா
கல்விமகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
பணிபல் மருத்துவத் துறை விஞ்ஞானி
அறியப்படுவதுபல் மருத்துவத்தில் தான் செய்த சேவைக்காக நாரி சக்தி விருது பெற்றவர்

வாழ்க்கை தொகு

லிசிமோல், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்ட மும் பெற்றவர். இவருக்கு 1998-இல் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[1]

மேலும், இவர் கேரள அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாநிலக் குழுவின் 2002ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றார். 

இவர் 2015ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த இளைஞர் விருதைப் பெற்றார். இளைஞர்கள் சங்கம், கிழக்கு தேவாலயம், மத்திய குழு, கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எஸ். வாசுதேவ் விருது 2014 [2] ஆகியவற்றிலிருந்து அறிவியலில் இவர் செய்த சாதனைகளைப் பாராட்டுவதற்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார்.

அனைத்துலக பெண்கள் நாளன்று (8 மார்ச்) 2017 அன்று புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து இந்தியாவின் பெண்களுக்கான மிக உயரிய விருதான நாரி சக்தி விருது [3] பெற்ற முப்பது பெண்கள் மற்றும் ஒன்பது நிறுவனங்களில் இவரும் ஒருவர் ஆவார்.[4] கேரளாவைச் சேர்ந்த கோவில் ஓவியர் சியாமளா குமாரி மற்றும் விலங்கியல் நிபுணர் எம். எஸ். சுனில் ஆகியோரும் இந்த விருதினை வென்றனர்.[5] விருதுடன், 100,000 ரூபாய் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைத்தது. இவர், பல் மருத்துவத்துறையில், பயோஆக்டிவ் பாலிமர் மற்றும் பாலிமர் அடிப்படையிலான கலவைப் பொருளை உருவாக்கியதற்காக அங்கீகரிக்கப்பட்டார். இது பல் மறுசீரமைப்பிற்காகவும், உள்வைப்புகளை சரிசெய்ய எலும்பு சிமெண்டாகவும் பயன்படுத்தப்படலாமென்று சொல்லப்படுகிறது.[5]

இவர், திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இந்திய அரசால் வழங்கப்படும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான 7வது மற்றும் 10வது தேசிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.[6] 2020ஆம் ஆண்டில் கேரள அரசின் தேசிய போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி மையத்திலிருந்து கேரள மாநில அறிவியல் இலக்கிய விருதினைப் (குழந்தைகள் அறிவியல்) பெற்றவர். மேலும், 19 இந்திய காப்புரிமைகள், 11 மாற்றப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பல வணிகமயமாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் உட்பட 28 காப்புரிமைகளை இவர் பெற்றுள்ளார்.

புத்தகங்கள் தொகு

  • இவர், மலையாளத்தில் எழுதிய லிசிமோல் பிபி "தந்தா சுச்சித்வாவும் ஆரோக்கியவும்". மார் நர்சாய் பிரிண்டர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ், திருச்சூர், கேரளா (கேரள மாநில அறிவியல் இலக்கிய விருது (KSCSTE) 2020 (குழந்தைகள் இலக்கியம்) பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "People - Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology, Trivandrum". www.sctimst.ac.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
  2. "List of Dr. S. Vasudev Awardees – Kerala State Council for Science, Technology & Environment" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
  3. "On International Women's Day, the President conferred the prestigious Nari Shakti Puraskars to 30 eminent women and 9 distinguished Institutions for the year 2017". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
  4. "Infographic: Nari Shakti Puraskar". The Times of India (in ஆங்கிலம்). 7 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
  5. 5.0 5.1 "Scientist, social worker and mural artist: Meet Nari Shakti winners from Kerala". https://www.thenewsminute.com/article/scientist-social-worker-and-mural-artist-meet-nari-shakti-winners-kerala-77643. 
  6. "DV Sadananda Gowda presents 10th National Awards for Technology Innovation in Petrochemicals & Downstream Plastics Processing Industry for FY19-20". affairscloud.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.