லின்க்சு (Lynx) என்பது இணைய உலாவி ஆகும். இது லினக்சு வகைக் கணினிகளின் முனையத்தில் மட்டும் செயற்படும், பனுவல்(Text) வகை உலாவி ஆகும். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட முனையத்தில் படங்களையும், ஆன்ட்ராய்டு போன்ற பிற இயக்குதளங்களிலும் இவ்வுலாவியின் வழியே இணையப் பக்கங்களைக் காணலாம்.[3] இவ்வுலாவி 1992ஆம் ஆண்டு கேன்சஸ் பல்கலைக்கழக மாணவர்களால், அவர்களின் பல்கலைக்கழகச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. எனினும், கடைசியாக 2017ஆம் வரை மேம்படுத்தப்பட்டு, உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் உதவிக்குறிப்புகள் மூலம், தட்டச்சு பலகை வழியே 142 குறுக்குவிசைகளைப் பயன்படுத்தி இதனை எளிமையாகப் பயன்படுத்தலாம் என அறியமுடிகிறது. மேலும், 233 அமைப்பு வடிவாக்கமும் உள்ளன. பார்வைக்குறைபாடு உள்ளவர்கள், இந்த உலாவியைப் பயன்படுத்தி(text to speech) மிகுந்த பலனை அடைகின்றனர்.[4][5][6] முனையத்தினை மூடாமல், இந்த உலாவியில் இருந்து வெளிவர, Ctrl + C என்ற விசைகளைப் பயன்படுத்த வேண்டும்.

லின்க்சு
இக்கட்டுரையை முனையத்தில் காட்டும் நிகழ்படம்
மென்பொருள் வடிவம்Lou Montulli, Michael Grobe, Charles Rezac
மேம்பாட்டாளர்Thomas Dickey
தொடக்க வெளியீடு1992; 33 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
எழுதப்பட்ட மொழிISO C
இயக்க அமைப்புUnix-like,[1] டாஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு[2]
பொறிfork (software development)of libwww
கிடைக்கக்கூடிய மொழிகள்ஆங்கிலம்
வளர்ச்சி நிலைசெயற்படுகிறது
வகைபனுவல் இணைய உவாவி
உரிமம்GNU GPLv2


மேற்கோள்கள்

தொகு
  1. Nelson, H. (24 April 1999). "Lynx Installation Guide". lynx.invisible-island.net.
  2. Dickey, Thomas (11 September 2015). "Lynx2.8.8 [sic]". lynx.invisible-island.net.
  3. "[APP] Compiled lynx binary for android - Shell or ADB". XDA Developers. பார்க்கப்பட்ட நாள் 2016-05-27.
  4. Paciello 2000, ப. 157.
  5. Bolso 2005.
  6. Seltzer 1995.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lynx web browser
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லின்க்சு&oldid=2480552" இலிருந்து மீள்விக்கப்பட்டது