லியுத்தேத்தியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

லியுத்தேத்தியம்(III) அயோடைடு (Lutetium(III) iodide) என்பது LuI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலூட்டீசியமும் அயோடினும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.

லியுத்தேத்தியம்(III) அயோடைடு
Lutetium(III) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
லியுத்தேத்தியம் அயோடைடு
லியுத்தேத்தியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13813-45-1 Y
ChemSpider 75574
EC number 237-475-0
பப்கெம் 83752
பண்புகள்
LuI3
தோற்றம் திண்மம்[1]
அடர்த்தி 5.60 கி/செ.மீ−3[1][2][3][4]
உருகுநிலை 1050 °செல்சியசு[1]
கொதிநிலை 1210 °செல்சியசு[5]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை[1]
H315, H335, H319
P261, P280, P405, P501, P304+340, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

இலூட்டீசியம் தனிமத்துடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இலூட்டீசியம்(III) அயோடைடு உருவாகிறது.:[5][2]

2 Lu + 3 I2 → LuI3

வெற்றிடத்தில் இலூட்டீசியம் தனிமத்துடன் பாதரச அயோடைடைச் சேர்த்து 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தாலும் இலூட்டீசியம்(III) அயோடைடு உருவாகும்.:[5]

2 Lu + 3 HgI2 → 2 LuI3 + 3 Hg

இவ்வினையில் உருவாகும் பாதரசத்தை வடிகட்டுதல் முறை மூலம் தனியே பிரித்தெடுக்கலாம்.[6]

இலூட்டீசியம்(III) அயோடைடு நீரேற்றை அமோனியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் நீரிலி நிலை இலூட்டீசியம்(III) அயோடைடு படிகமாகும்.[7][5]

பண்புகள் தொகு

பிசுமத்(III) அயோடைடு வகை படிக அமைப்பைக் கொண்டதாக இலூட்டீசியம்(III) அயோடைடு காணப்படுகிறது. பழுப்பு நிறத்தில் மிகவும் நீருறிஞ்சும் திடப்பொருளாகவும் அறியப்படுகிறது. காற்றில் விரைவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீரேற்ருகளை உருவாக்கும்[2][3][4] இதனுடன் தொடர்புடைய ஆக்சைடு அயோடைடும் உயர்ந்த வெப்பநிலையில் உடனடியாக உருவாகிறது.

சீரியத்துடன் இலூட்டீசியம்(III) அயோடைடு சேர்மத்தை மாசாக கலந்து பாசிட்ரான் உமிழ்வு தளகதிர் வரைவிகளில் பயன்படுத்த வடிவமைக்கப்படுகிறது.[8] நியூட்ரான் மற்றும் காமா கதிர்வீச்சைக் கண்டறிய LuI3-YI3-GdI3 மினுமினுப்பிகளில் இட்ரியம் அயோடைடு, கடோலினியம் அயோடைடு ஆகியவற்றுடன் இலூட்டீசியம்(III) அயோடைடையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 வார்ப்புரு:Alfa
  2. 2.0 2.1 2.2 Webelements: Lutetium: lutetium triiodide Retrieved 31.3.2018
  3. 3.0 3.1 Americanelements.com: Lutetium Iodide Retrieved 31.3.2018
  4. 4.0 4.1 Perry, Dale L. (2016). Handbook of Inorganic Compounds. 2. painos. CRC Press. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439814628. பார்க்கப்பட்ட நாள் 2018-03-31.
  5. 5.0 5.1 5.2 5.3 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1077.
  6. Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. Preparation and crystal data for lanthanide and actinide triiodides. Inorg. Chem., 1964. 3 (8): 1137-1240
  7. 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 211
  8. Saha, Gopal B. (2010). Basics of PET Imaging: Physics, Chemistry, and Regulations (in ஆங்கிலம்). Springer. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781441908056. பார்க்கப்பட்ட நாள் 2018-03-31.
  9. Glodo, Jarek; van Loef, Edgar V. D. & Higgins, William M. (2008-06-17). "Mixed Lutetium Iodide Compounds" (in en). IEEE Transactions on Nuclear Science 55 (3): 1496–1500. doi:10.1109/TNS.2008.922215. பன்னாட்டுத் தர தொடர் எண்:1558-1578. Bibcode: 2008ITNS...55.1496G.