லியோனார்டா ஏஞ்சலா காசிராகி

சமூக சேவகர்

லியோனார்டா ஏஞ்சலா காசிராகி (Leonarda Angela Casiraghi) பிரபலமாக டோடம்மா என்று அழைக்கப்படுகிறார். இத்தாலி நாட்டில் பிறந்த இந்திய கத்தோலிக்க மத போதகர் மற்றும் சமூக சேவகர் ஆவார். தென்னிந்திய மாநிலமான கருநாடக மாநிலத்தில் உள்ள தார்வாடு நகரத்தில் மருத்துவ சேவைக்காக அறியப்பட்டவர் ஆவார். [1] 1958 ஆம் ஆண்டில் தார்வாட்டில் ஒரு சிறிய மருத்துவ மருந்தகத்தை நிறுவினார். பின்னர் அது ஒரு முழு அளவிலான மருத்துவமனையாக வளர்ந்தது. இந்த மருத்துவமனையின் பெயர் லேடி ஆப் லூர்து அறக்கட்டளை மருத்துவமனை ஆகும். [2] 1955 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கு வந்து, தார்வாட்டில் மருத்துவ வசதியை நிறுவுவதற்கு முன்பு மங்களூர் மற்றும் ஐதராபாத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். சிசுடர்ஸ் ஆப் சாரிட்டி ஆப் செயிண்ட்சு பார்டோலோமியா கேபிடானியோ மற்றும் வின்சென்சா செரோசா சபையின் உறுப்பினரான இவர், மருத்துவமனை மட்டுமின்றி லேடி ஆஃப் லூர்து நர்சிங் பள்ளியின் நிர்வாகியாகவும் இருந்தார். [3] சமூகத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக, 1998 ஆம் ஆண்டில், இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ சிவிலியன் விருதைப் பெற்றார். [4]

லியோனார்டா ஏஞ்சலா காசிராகி
பிறப்புஇத்தாலி
இறப்பு27 ஆகத்து 2011
தார்வாடு, கருநாடகம், இந்தியா
பணிகத்தோலிக்க மதபோதகர்
சமூக சேவகர்
செயற்பாட்டுக்
காலம்
1955–2011
அறியப்படுவதுலேடி ஆப் லூர்து அறக்கட்டளை மருத்துவமனை
விருதுகள்பத்மசிறீ

இவர் 2011 ஆம் ஆண்டு ஆகசுடு மாதம் 27 ஆம் தேதியன்று தார்வாடு நகரத்தில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sr Leonarda Angela Casiraghi Laid to Rest - A Tribute". Daiji World. 29 August 2011. பார்க்கப்பட்ட நாள் 27 October 2015.
  2. "Our Lady of Lourdes". Our Lady of Lourdes Charitable Hospital. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 October 2015.
  3. "Sister of Charity". Sister of Charity. 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 October 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.