லியோன் மேக்சு லேடர்மேன்
லியோன் மேக்சு லேடர்மேன் (Leon Max Lederman) ஓர் அமெரிக்க சோதனை இயற்பியலாளர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். மார்டின் இலூயிசு பெர்ல் உடன் இணைந்து குவார்க்குகள் மற்றும் லெப்டன் எனப்படும் மென்மிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான உல்ப் பரிசு 1982 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதேபோல மெல்வின் சிகுவார்ட்சு மற்றும் யாக் சிடீன்பெர்கர் ஆகியோருடன் இணைந்து நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் இல்லினோயிசு மாகாணத்திலுள்ள பட்டாவியா நகரத்தில் உள்ள பெர்மி ஆய்வகத்தின் இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் 1986 ஆம் ஆண்டில் இல்லினோயிசின் அரோராவில் இல்லினோயிசு கணிதம் மற்றும் அறிவியல் அகாடமியை நிறுவினார். மேலும் 2012 முதல் 2018 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை அங்கு ஓய்வுபெற்ற உறைவிட அறிஞராக இருந்தார் [1][2]. ஒரு திறமையான விஞ்ஞான எழுத்தாளராக இவர் 1993 ஆம் ஆண்டில் தி காட் துகள் என்ற புத்தகத்திற்காக அறியப்பட்டார். இந்நூலில் அடிப்படைத்துகளான இக்சு போசானின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.
லியோன் மேக்சு லேடர்மேன் Leon M. Lederman | |
---|---|
1988 இல் லேடர்மேன் | |
பிறப்பு | லியோன் மேக்சு லேடர்மேன் சூலை 15, 1922 நியூயார்க்கு நகரம், U.S. |
இறப்பு | அக்டோபர் 3, 2018 ரெக்சுபர், இதாகோ, அமெரிக்கா | (அகவை 96)
தேசியம் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கொலம்பியா பல்கலைக்கழகம் பெர்மி ஆய்வகம் இலினாயிசு தொழில்நுட்பக் கழகம் |
கல்வி | நியூயார்க் சிட்டி கல்லூரி (B.A.) கொலம்பியா பல்கலைக்கழகம் (முனைவர்) |
அறியப்படுவது | நியூட்ரினோக்கள் ஆய்வு, குவார்க்குகள் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1988) இயற்பியல் உல்ஃப் பரிசுகள் (1982) தேசிய அறிவியல் பதக்கம் (1965) வன்னேவர் புஃசு விருது (2012) வில்லியம் புரோக்டர் விருது (1991) |
துணைவர் | புளோரன்சு கார்டன் எலன் கார் |
இளமை காலம்
தொகுநியூயார்க்கில் மின்னா மற்றும் மோரிசு லேடர்மேன் தம்பதியருக்கு லேடர்மேன் மகனாக பிறந்தார்[3]. இவரது பெற்றோர் கியேவ் மற்றும் ஒடெசாவிலிருந்து குடியேறிய உக்ரேனிய-யூதர்களாவர்[4]. நியூயார்க்கின் தெற்கு பிராங்சில் இருக்கும் யேம்சு மோன்ரோ உயர்நிலைப் பள்ளியில் லேடர்மேன் படித்தார்[5].1943 ஆம் அண்டு நியூயார்க்கில் உள்ள சிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றார்.[6].
பின்னர் இவர் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார் [6]. இரண்டாம் உலகப் போரின் போது ஓர் இயற்பியலாளராக மாற விரும்பியதன் காரணமாகவே இவர் இராணுவத்தில் இணைந்தார் [7]:17 1946 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1951 ஆம் ஆண்டு ஆராய்ச்சிச்கான முனைவர் பட்டமும் பெற்றார்[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lederman, Leon M. (1988). Frängsmyr, Tore; Ekspång, Gösta. eds. "The Nobel Prize in Physics 1988: Leon M. Lederman, Melvin Schwartz, Jack Steinberger". Nobel Lectures, Physics 1981–1990. https://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1988/lederman-facts.html. பார்த்த நாள்: 22 May 2012.
- ↑ "Fermilab History and Archives Project–Golden Books – An Eclectic Reader on Leon M. Lederman". history.fnal.gov. Fermilab. 2012. Archived from the original on 10 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2016.
- ↑ Lillian Hoddeson; Adrienne W. Kolb; Catherine Westfall (1 August 2009). Fermilab: Physics, the Frontier, and Megascience. University of Chicago Press. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-34625-0.
- ↑ "Research Profile - Leon Max Lederman". www.mediatheque.lindau-nobel.org.
- ↑ Lederman, Leon (1991). "Leon M. Lederman – Biographical". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2 October 2016.
- ↑ 6.0 6.1 "Leon Lederman Biography – Academy of Achievement". www.achievement.org. 11 June 2011. Archived from the original on 9 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Lederman, Leon; Teresi, Dick (1993). The God Particle: If the Universe is the Answer, What is the Question. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780618711680.
- ↑ "A Short History of Columbia Physics". Department of Physics. Columbia University in the City of New York. 2016. Archived from the original on 4 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 October 2016.
புற இணைப்புகள்
தொகு- Education, Politics, Einstein and Charm The Science Network interview with Leon Lederman
- Fermilab's Leon M. Lederman webpage
- Video Interview with Lederman from the Nobel Foundation
- Timeline of Nobel Prize Winners in Physics webpage for Leon Max Lederman
- Story of Leon by Leon Lederman
- Honeywell – Nobel Interactive Studio பரணிடப்பட்டது 2017-11-21 at the வந்தவழி இயந்திரம்
- 1976 Cresson Medal recipient from The Franklin Institute
- Honoring Leon Lederman at APS April 2019
- யூடியூபில் The Singing Janitor - Leon Lederman
- வார்ப்புரு:INSPIRE-HEP author
- Finding Aid to the Leon M. Lederman Papers at Fermilab