லில்லி சனாதனன்
லில்லி பத்மன் சனாதனன் (Lilly Sanathanan) என்பவர் இந்தியப் புள்ளியியலாளர் ஆவார்.
சனாதனனின் ஆரம்பக்கால ஆராய்ச்சியானது, துகள் இயற்பியலின் பின்னணியில், மாதிரித் தரவுகளிலிருந்து முழுமைத்தொகுதியின் அளவை மதிப்பிடுவது தொடர்பானது. இவர் முனைவர் பட்டத்தினை 1969-ல், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரை, துகள் படியெடுத்தல் சூழலில் முழுமைத்தொகுதியினை மதிப்பிடுவது, டேவிட் லீ வாலஸால் மேற்பார்வையிடப்பட்டது[1]:{{{3}}} இல்லினாய்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி மற்றும் இணைப் பேராசிரியராகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு[2]:{{{3}}} இவர் 1970களின் பிற்பகுதியில் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார்.[[3]:{{{3}}}
1991-ல் இவர் ஆய்வின் கருப்பொருளை, மருந்து வளர்ச்சி துறைக்கு மாற்றினார். அபோட் ஆய்வகங்களில் மூத்த புள்ளியியல் நிபுணராகவும், சிபா-கீகியின் புள்ளியியல் இணை இயக்குநராகவும், ஸ்மித், ககிலைன் மற்றும் பிரஞ்சுக்கான ஆராய்ச்சி நிறுவனங்களில் புள்ளியியல் இயக்குநராகவும் பணியாற்றிய பிறகு, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் மருந்து மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயக்குநரானார்.[4]:{{{3}}} இவர் 1990-ல் அமெரிக்க புள்ளியியல் சங்கத்தின் உறுப்பினரானார்.[5]:{{{3}}} 1991-ல் இவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் உயிரியல் புள்ளியியல் மற்றும் மருத்துவ தரவு அமைப்புகளின் துணைத் தலைவராக தனியார் துறைக்குத் திரும்பினார்.[4]:{{{3}}} பின்னர் சனாதனன், 2003-ல் இந்திய சுகாதார நிறுவனமான சாமி ஆய்வகத்தில் (இப்போது சாமி-சபின்சா குழுமம்) வாங்கப்பட்ட இருநாட்டு (யுஎஸ் மற்றும் இந்திய) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான க்ளின்வேர்ல்டை நிறுவினார்.[6]:{{{3}}}
2008-ல் சனாதனன் பெங்களூரில் லைப் வெஸ்ட் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.[7]:{{{3}}} இவர் புளோரிடாவை தளமாகக் கொண்ட இசுடாலிங் என்ற புள்ளியியல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும் இவர் ஒரு கலாச்சார வலையொலி, குளோபல் இந்தியா பாட்காஸ்ட்க்கு பங்களிப்பாளராக உள்ளார்.[8]:{{{3}}}
மேற்கோள்கள்
தொகு- ↑ கணித மரபியல் திட்டத்தில் லில்லி சனாதனன்
- ↑ Affiliation as listed on her publications "Estimating the Size of a Multinomial Population" (1972, எஆசு:10.1214/aoms/1177692709) and "Estimating the Size of a Truncated Sample" (1977, எஆசு:10.2307/2286238)
- ↑ DOE Statistical Symposium, Sandia Laboratories (PDF), 1978, p. 332
- ↑ 4.0 4.1 "Lilly P. Sanathanan has joined the Institute...", Los Angeles Times, June 26, 1991, பார்க்கப்பட்ட நாள் 2022-08-08
- ↑ ASA Fellows, American Statistical Association, பார்க்கப்பட்ட நாள் 2022-08-08
- ↑ Urs, Anil (August 5, 2003), "Sami Labs buys CRO ClinWorld", The Economic Times, பார்க்கப்பட்ட நாள் 2022-08-08
- ↑ "Striking the perfect balance", The New Indian Express, December 2, 2008, பார்க்கப்பட்ட நாள் 2022-08-08
- ↑ Global India Podcast, archived from the original on 2022-03-08, பார்க்கப்பட்ட நாள் 2022-08-08