லீனா மொகந்தி
லீனா மொகந்தி (Leena Mohanty) ஒடிசி நடனத்தின் முன்னணிக் கலைஞராவார். இவர் குரு தேவ பிரசா தாசு என்பவரின் சீடரான இவர் 'உஸ்தாத் பிஸ்மில்லா கான் இளைஞர் விருது', 'மகரி விருது', 'சஞ்சுக்தா பாணிகிரகி விருது' ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவர் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான மன்றத்தின் தரவரிசைக் கலைஞர் ஆவார். ஒரு நடன இயக்குனரான இவர் சர்வதேச அளவில் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர்,ஒடிசாவின் புவனேசுவரத்தில் பன்சி பிலாசு நிறுவனத்தின் கலை இயக்குநராக உள்ளார். மேலும்,ம் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள கல்பனா நடன அரங்கின் ஒடிசி துறை மற்றும் நியூயார்க்கில் உள்ள 'திரினயன்' நடன மையத்தின் தலைவராகவும உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுலீனா மொகந்தி, இந்தியாவின் |ஒடிசா மாநிலத்தில் புவனேசுவரத்தில் ஒரு தொழிலதிபரான ரபிநாராயண மொகந்தி மற்றும் ஒரு கவிஞரான சுவர்ணா மொகந்தி ஆகியோருக்குப் பிறந்தார். தனது நான்காவது வயதில் ஒடிசி நடனத்தில் அறிமுகமான இவர், ஒடிசியின் நான்கு முதல் தலைமுறை குருக்களில் ஒருவரான தேவ பிரசாத் தாசின் கீழ் முதலில் கற்றுக்கொண்டார். ஆனால் தனது ஆசிரியரின் மறைவுக்குப் பிறகு இவர் குரு துர்கா சரண் ரன்பீரிடம் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். இவர் இன்றும் தொடர்ந்து ஒடிசி நடனத்தை கற்றுத் தந்து வருகிறார்.
1984 இல், குருதாஸ் இயக்கிய ஒடியத் திரைப்படமான வசந்த ராசா (1984) என்பதில் ராதையின் விசுவாசமான தோழியான லலிதாவாக நடித்தார்.
விருதுகள்
தொகு- 2006இல் புது தில்லி, சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது வழங்கியது
- 2006இல் மகரி விருது பெற்றார்.
- புது தில்லி, பதிதபவன் கலா நிகேதன் வழங்கிய சஞ்சுக்தா பாணிகிரகி விருது பெற்றவர்
- ஒடிசி நடனத்திற்காக இந்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் உதவித் தொகையைப் பெற்றுள்ளார்.
- ஒடிசி நடனத்திற்காக இந்திய அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையிலிருந்து தேசிய உதவித்தொகை பெற்றவர்.
- இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த சுர்சிங்கர் சம்சாத் என்பவரால் சிங்காரமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது
- இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தின் தரவரிசைக் கலைஞராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகுhttp://www.artindia.net/leena[1]
http://artindia.net/leena/about.html[2]
http://www.thestar.com.my/lifestyle/entertainment/arts/2013/07/23/two-dance-forms-come-together-in-sharanagati/[4]
https://www.nytimes.com/2010/08/21/arts/dance/21fringe.html[5]
https://orissamatters.wordpress.com/tag/leena-mohanty/[6]
https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/280718/ode-to-the-odissi.html[7]
https://www.thehindu.com/entertainment/dance/leena-mohantys-upcoming-odissi-performance-in-bengaluru-anurati-is-based-on-the-different-kinds-of-love/article66086210.ece[8]
https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/040818/mudras-of-movement.html[9]
https://www.thehindu.com/entertainment/dance/revealing-a-different-story/article21289124.ece[10]
https://www.theedgemarkets.com/article/odissi-extravaganza-0[11]
https://www.pressreader.com/malaysia/the-star-malaysia-star2/20170708/281749859386213[12]
- ↑ "Leena Mohanty – Exponent of Odissi". artindia.net. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ "About Leena Mohanty - www.artindia.net". artindia.net. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ "International Odissi Festival 2006: Leena Mohanty performs Bajilani bajiba". Pad.ma. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ Ganesan, Sharmilla. "Two dance forms come together in Sharanagati". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ Macaulay, Alastair (2010-08-20). "In Balances and Counterbalances, the Classicism of India" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2010/08/21/arts/dance/21fringe.html.
- ↑ "Leena Mohanty". Orissa Matters (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ Shaji, Seona (2018-07-28). "Ode to the Odissi". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ "Leena Mohanty's upcoming Odissi performance in Bengaluru, 'Anurati', is based on the different kinds of love" (in en-IN). The Hindu. 2022-11-07. https://www.thehindu.com/entertainment/dance/leena-mohantys-upcoming-odissi-performance-in-bengaluru-anurati-is-based-on-the-different-kinds-of-love/article66086210.ece.
- ↑ "Leena Mohanty's upcoming Odissi performance in Bengaluru, 'Anurati', is based on the different kinds of love" (in en-IN). The Hindu. 2022-11-07. https://www.thehindu.com/entertainment/dance/leena-mohantys-upcoming-odissi-performance-in-bengaluru-anurati-is-based-on-the-different-kinds-of-love/article66086210.ece.
- ↑ Sreevathsa, Sammitha (2017-12-07). "Revealing a different story" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/dance/revealing-a-different-story/article21289124.ece.
- ↑ "Odissi extravaganza". The Edge Markets. 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
- ↑ https://www.pressreader.com/malaysia/the-star-malaysia-star2/20170708/281749859386213. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15 – via PressReader.
{{cite web}}
: Missing or empty|title=
(help)