லீனா யாதவ்

இந்திய திரைப்பட படைப்பாளி

லீனா யாதவ் (Leena Yadav, பிறப்பு 6 சனவரி 1971) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தொலைக்காட்சித் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் படிப்படியாக திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். இவரது முதல் சர்வதேச திரைப்படமான பார்ச்ட், 2015 இல் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. [1] [2]

லீனா யாதவ்
பிறப்பு6 சனவரி 1971 (1971-01-06) (அகவை 53)
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
அசீம் பஜாஜ்
உறவினர்கள்இராம் கோபால் பஜாஜ் (மாமனார்)

துவக்க வாழ்க்கையும் கல்வியும் தொகு

மத்தியப் பிரதேசத்தில் இந்தியத் தரைப்படை ஜெனரலுக்குப் பிறந்த இவர், தில்லியில் உள்ள சீமாட்டி சிறீ ராம் மகளிர் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். இவர் மும்பை சோபியா கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். [2] [3] [4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் இந்திய ஒளிப்பதிவாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான அசீம் பஜாஜை ( ராம் கோபால் பஜாஜின் மகன் மற்றும் கேம்சந்த் பிரகாஷின் தாய்வழி பேரன்) மணந்தார். அவர் ஹஸாரோன் குவைஷீன் ஐசி, ஷப்த், தீன் பட்டி, யூ மீ அவுர் ஹம், சமேலி போன்ற படங்களில் தனது கவிதைத் தனமான படங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் தன் முதல் தொலைக்காட்சி நிக்ச்சியான திஸ் வீக் திஸ் இயர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கும் போது அசீமை சந்தித்தார். [3]

திரைப்படவியல் தொகு

திரைப்படப் படத் தொகுப்பு வேலையால் கவரப்பட்ட இவர், மாஸ் கம்யூனிகேஷன்ஸ் பின்னணியில் பட்டையப் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, திரைப்படத் தொகுப்புக் கற்றுக்கொண்டார். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல், படத்தொகுப்பில் இருந்தே இயக்கம், திரைக்கதை எழுதுவது பற்றி கற்றுக்கொண்டார். 'விளம்பரப் படங்கள்' - பெருநிறுவன நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றிற்கு படத் தொகுப்பாளராகப் பணிபுரிந்தபோது, ஸ்டார் மூவிகளுக்காக திஸ் வீக் தட் இயர் என்ற ஒரு தொலைக்காட்சி (டிவி) நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஸ்டார் பெஸ்ட்செல்லருக்காக நிகழ்ச்சிகளைத் தயாரித்து இயக்குவதற்காக நிகில் கபூருடன் இணைந்து சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். [1] [2] [3] [5]

ஒரு தொலைக்காட்சி இயக்குநராக, இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக புனைவு மற்றும் அபுனைவு என இரு வகையான நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டார் பெஸ்ட்செல்லர்களுக்காக தனி அத்தியாயங்களாக, அனுபம் அங்கிள், சஞ்சீவனி மற்றும் பல ஆகும். [1]

ஒரு முக்கிய திரைப்பட இயக்குநராக, 2005 இல் வெளியான ஷப்த் திரைப்படம் வழக்கத்திற்கு மாறான கதைக்களத்தைக் கொண்ட படமான இதன் வழியாக திரைப்பட இயக்குநராக அறிமுகமானார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கிய இரண்டாவது படம் டீன் பட்டி ஆகும். [6] தன்னிஷ்தா சாட்டர்ஜி, ராதிகா ஆப்தே, சுர்வீன் சாவ்லா, அடில் உசைன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இவர் அண்மையில் இயக்கிய திரைப்படம் பார்ச்ட் ஆகும். [7] [8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Playing Teen Patti with Leena Yadav". starboxoffice.com. Archived from the original on 6 June 2012. பார்க்கப்பட்ட நாள் 17 March 2012. Editing intrigued, so I learnt it. I have never assisted anybody, so I have learnt everything about direction and writing from editing. While I was editing, I got the offer to direct something for television, post which I directed fiction and non-fiction shows on TV for 12 years"Playing Teen Patti with Leena Yadav". starboxoffice.com. Archived from the original on 6 June 2012. Retrieved 17 March 2012. Editing intrigued, so I learnt it. I have never assisted anybody, so I have learnt everything about direction and writing from editing. While I was editing, I got the offer to direct something for television, post which I directed fiction and non-fiction shows on TV for 12 years
  2. 2.0 2.1 2.2 "Indiantelevision.com's Interview with TV director Leena Yadav". indiantelevision.com. 20 August 2002. பார்க்கப்பட்ட நாள் 18 April 2012. The lady who started her career in television as an editor and graduated to direction with the Star Movies' show This Week That Year has come a long way. After the Nikhil Kapoor anchored show, Yadav floated her own production house with Kapoor and produced one-off stories for Star Bestsellers, which she also directed."Indiantelevision.com's Interview with TV director Leena Yadav". indiantelevision.com. 20 August 2002. Retrieved 18 April 2012. The lady who started her career in television as an editor and graduated to direction with the Star Movies' show This Week That Year has come a long way. After the Nikhil Kapoor anchored show, Yadav floated her own production house with Kapoor and produced one-off stories for Star Bestsellers, which she also directed.
  3. 3.0 3.1 3.2 "Meet the woman behind Shabd". ரெடிப்.காம். 1 February 2005. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012. Born in Madhya Pradesh [ Images ], Leena was brought up 'all over India [ Images ],' thanks to her armyman father – I met my husband through work. My first directorial venture was This Week That Year, which was also Aseem's first show. After that, we got married.
  4. "Leena Yadav – Director, editor, and writer". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2012. Born: January 6, 1971 in India
  5. "Leena Yadav – Film director". scmsophia.com. 13 January 2012. Archived from the original on 2 February 2013. பார்க்கப்பட்ட நாள் 16 April 2012. Leena Yadav conducts workshops on cinema. She is an experienced television and film professional, and has worked on ad films, corporate videos and television shows. She has directed television shows such as This Week That Year, Sanjeevani, Kahi na Kahi Koi Hai, Goonj and Khauf.
  6. "No film without Big B says Leena Yadav". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 January 2010. Archived from the original on 7 July 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012. Leena Yadav's directorial debut Shabd had an unconventional storyline and an even more unexpected cast – Sanjay Dutt, Aishwarya Rai Bachchan and Zayed Khan. With her second directorial venture, she's made even more interesting permutations and combinations in her casting.
  7. "Oscar Winner Russell Carpenter to Lens U.S.-India Co-Production 'Parched' (Exclusive)". Hollywood Reporter. 11 February 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.
  8. "Getting threats over Parched, says director Leena Yadav". The Indian Express (in ஆங்கிலம்). 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீனா_யாதவ்&oldid=3903115" இலிருந்து மீள்விக்கப்பட்டது