லீலா பேலஸ், ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸ்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
லீலா பேலஸ், ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸ், ஒரு மதிப்புமிக்க விருந்தோம்பல் செய்யக்கூடிய ஹோட்டல் ஆகும். இந்நிறுவனம் 1987 ஆம் ஆண்டு கேப்டன் சி. பி. கிருஷ்ணன் நாயர் அவர்களால் நிறுவப்பட்டது. [1] தனது மனைவியின் பெயரில் அவர் இந்நிறுவனத்தினை தொடங்கினார். தற்போது லீலா என்று சாதாரணமாக அழைக்கப்படும் நிறுவனத்தின் பின்புலத்தில் சுமார் எட்டு ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்கள் முறையே மும்பை, கோவா, பெங்களூர், திருவனந்தபுரம், குர்கான், உதய்பூர், புது டெல்லி மற்றும் சென்னை போன்ற இடங்களில் அமைந்துள்ளது. சென்னையில் 2013 ஆம் ஆண்டு தனது புதிய ஹோட்டலை திறந்த இந்நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் ஆக்ரா, கேரளாவின் கொல்லம் மற்றும் ஜெய்பூர் ஆகிய பகுதிகளில் தனது புதிய ஹோட்டல்களை திறக்கவும் திட்டங்கள் வகுத்துள்ளது.இந்நிறுவனம் தனது கூட்டணியினை அமெரிக்காவினை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்களுடன் மேற்கொண்டுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ள குளோபல் ஹோட்டல் அலையன்ஸ் குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. [2][3] இந்நிறுவனம், ஜெர்மனியினை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் கெம்பின்ஸ்கியுடனான தனது வணிகத்தினை 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறித்துக்கொண்டது.
லீலா ஹோட்டல் கோவா
தொகுலீலா ஹோட்டல் கோவா, வர்கா கடற்கரையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், டைடோ குழுவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும், கவேலோஸிமில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும், பெனௌலிம் கடற்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மஜோரடா கடற்கரையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும், கோல்வே கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பலோலெம் கடற்கரையில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[4]
போக்குவரத்து வசதிகள்
தொகுலீலா ஹோட்டல் கோவா பின்வரும் போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது.
கபோலிம் விமான நிலையம் – 40 கிலோ மீட்டர் (தோராயமாக)
மார்கோ ரயில் நிலையம் – 18 கிலோ மீட்டர் (தோராயமாக)
முக்ஸர் பேருந்து நிலையம் – ஒரு கிலோ மீட்டர் (தோராயமாக)
ஹோட்டல் உருவான விதம்
தொகுகேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கண்ணூர் எனும் கிராமத்திற்கு அருகே வசித்து வந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணன் நாயர். இவர் தனது வேலையினை இந்திய இராணுவத்தின் மூலம் தொடங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு உருவான இராணுவத்தில் பணியாற்றிய கிருஷ்ணன் நாயர், ஒரு கைத்தறி வியாபாரியின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். தனது மனைவியின் பெயரிலேயே புதியதாக ஜவுளி ஏற்றுமதி தொழிலையும் தொடங்கினார். இதற்கு லீலா ஸ்காட்டிஷ் சரிகை என்று பெயரிட்டார்.[5] 1958 ஆம் ஆண்டின் பிற்பாதியில் மும்பையின் சஹார் பகுதியில் சரிகை நெசவிற்கான பிரிவினைத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு தனது மனைவி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தினை (லீலா ஸ்காட்டிஷ் சரிகை) விற்றார். அப்போது 65 வயதான கிருஷ்ணன் நாயர், லட்சதிபதியாக இருந்தார்.
அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு, சுமார் 11 ஏக்கர் அளவில் நிலப்பரப்பினை மும்பையில் சஹார் பகுதியில், அவரின் வீட்டிற்கு அருகில் வாங்கி அதில் தனது முதல் ஹோட்டலினைக் கட்டினார். அதற்கு லீலா ஹோட்டல் மும்பை என பெயரிட்டார். சஹார் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் முதல் மதிப்புமிக்க ஹோட்டலாகத் திகழ்ந்தது.
அமைவிடங்கள்
தொகுஅரண்மனை
தொகு- லீலா பேலஸ் பெங்களூர்
- லீலா பேலஸ் உதய்பூர்
- லீலா பேலஸ் புது டெல்லி
- லீலா பேலஸ் சென்னை
ஹோட்டல்கள்
தொகு- லீலா மும்பை
- லீலா கெம்பின்ஸ்கி குர்கான்
ரிசோர்ட்ஸ்
தொகு- லீலா கோவா
- லீலா ராவிஸ் (கோவலம், திருவனந்தபுரம்)
ரெஸிடென்சி
தொகு- லீலா கெம்பின்ஸ்கி குர்கான் ரெசிடென்சி
அடிப்படை வசதிகள்
தொகுகம்பியில்லா இணையச்சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், காஃபி, அறைச் சேவை, இணைய வசதி, வணிக மையம், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவை அடிப்படை வசதிகளாக இங்கு வழங்கப்படுகின்றன.
அடிப்படை அறை வசதிகள்
தொகுகுளிரூட்டப்பட்ட அறை வசதி இங்கு அடிப்படையாக வழங்கப்படுகிறது.
உணவு மற்றும் குடிபானங்கள்
தொகுபார், உணவகம் மற்றும் காஃபி ஷாப் ஆகியவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.
வணிகச் சேவைகள்
தொகுவணிக மையம், ஒலி ஒளி கருவிகள், எல்சிடி காட்சியளிப்பான், கூட்ட அரங்கு வசதிகள், சந்திப்பு அறை போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.
மறு உருவாக்க சேவைகள்
தொகுகுழந்தைகள் நீச்சல் குளம், உடற்பயிற்சி செய்யும் இடம், இரவு நேர கூட்ட அறைகள், இசை நடனம், அழகுக்கலை மற்றும் முடிதிருத்துமிடம், மற்றும் வெளிப்புற நீச்சல் குளம் போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.
பயணச் சேவைகள்
தொகுபயண உதவிகள், விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் வசதி, வாகன நிறுத்துமிடம் போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.
தனிப்பட்ட சேவைகள்
தொகு24 மணி நேர வரவேற்பு பகுதி, 24 மணி நேர அறைச்சேவை, குழந்தை பராமரிப்பவர்கள், துணி சலவை செய்பவர்கள், அறைச்சேவை போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ "The Leela story". moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 18 Nov 2015.
- ↑ "History". The Leela website.
- ↑ Sanghvi, Vir (February 12, 2011). "Hotel Leela's Captain Courageous ,,". Hindustan Times New Delhi இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 30, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110830002953/http://www.hindustantimes.com/Hotel-Leela-s-Captain-Courageous/Article1-661465.aspx.
- ↑ "The Leela Goa Features". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 18 Nov 2015.
- ↑ "The Leela Goa Hotel Information". theleela.com. Archived from the original on 20 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 18 Nov 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)