லீலா ராம்குமார் பார்கவா
ராணி லீலா ராம்குமார் பார்கவா (Rani Lila Ramkumar Bhargava) இந்திய சுதந்திர போராட்ட வீரர், சமூக சேவகர், கல்வியாளர்[1] மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர்[2] போன்ற பல சிறப்புக்களுக்கு உரியவராவார். இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் தோழியாக இவர் இருந்தார்.[2]
லீலா ராம்குமார் பார்கவா Lila Ramkumar Bhargava | |
---|---|
பிறப்பு | இந்தியா, 1921-1922 |
இறப்பு | 25 மே 2014 பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | சமூகப் பணியாளர், சுதந்திரப் போராட்ட வீரர் |
வாழ்க்கைத் துணை | முன்சி ராம் குமார் பார்கவா |
பிள்ளைகள் | ரஞ்சித் பார்கவா |
விருதுகள் | பத்மசிறீ |
ஆசியாவின் மிகப் பழமையான அச்சகமான நவல் கிசோர் அச்சகத்தின் நிறுவனரான முன்சி நவல் கிசோர் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[3] ராணி லீலாவின் கணவர் பெயர் முன்சி நவல் கிசோர் பார்கவா என்பதாகும். பார்கவா முன்சி நவல் கிசோர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை உறுப்பினராவார். அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்த லார்டு வேவல் பார்கவாவிற்கு ராசா என்ற பட்டத்தை கொடுத்தார்.[4]
ராணி லீலாவுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் குழந்தைகளாவர்.[5] இவருடைய மகன் இரஞ்சித் பார்கவா பத்மசிறீ விருது [4] பெற்ற ஒரு பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலராவார். [6] 1971-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை ராணி லீலாவிற்கு வழங்கி சிறப்பித்தது. [7]
ராணி லீலா தன்னுடைய 92 ஆவது வயதில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "First death anniversary observed". Press Reader. 2015. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.
- ↑ 2.0 2.1 "Freedom fighter Rani Lila Ram Kumar Bhargava passes away". Business Standard. 25 May 2014. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.
- ↑ B. G. Varghese (2014). Post Haste Quintessential India. Wstland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789383260973. Archived from the original on 28 May 2015. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - ↑ 4.0 4.1 "Ranjit Bhargava". Video. YouTube. 19 August 2011. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Drive to get Upper Ganga declared a World Heritage site". Ganga Action Parivar. 2012. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.