கிறிஸ்வத சமயத்தில் சாத்தானின் மற்றொரு பெயர் லூசிஃபர். ஏனென்றால் பழைய ஏற்பாட்டின் ஏசாயா புத்தகத்தில் உள்ள ஒரு பகுதியை மக்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் விளக்குகிறார்கள். லூசிஃபர் என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும். இது லக்ஸ்-லூசிஸ் (ஒளி) மற்றும் ஃபெர்ரே (கொண்டு வர) ஆகிய இரண்டு பகுதிகளால் ஆனது. இலத்தீன் வல்கேட்டில் லூசிஃபர் பற்றிய இரண்டு குறிப்புகள் உள்ளது. ஒன்று விடியற்காலையில் தோன்றும் வெள்ளிக் கோளான (வீனஸ்) விடியற்காலை நட்சத்திரத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. இரண்டு பேதுரு 1:19இல் ஒருமுறை கிரேக்கச் சொல்லான "Φωσφόρος" (பாஸ்போரோஸ்), "ஒளியைக் கொண்டுவருபவன்" என்பதன் அதே நேரடிப் பொருளைக் கொண்டுள்ளது. "லூசிஃபர்" என்ற சொல் இலத்தீன் மொழியில் உள்ளது; மற்றும் ஏசாயா புத்தகத்தில் 14:12இல் லூசிஃபரை "காலை நட்சத்திரம்" என்றுக் குறித்துள்ளது.[1][2][3]

காலை நட்சத்திரத்தின் இலத்தீன் பெயர்

தொகு

ஹெஸ்பெரஸ் மற்றும் பாஸ்பரஸுடன் சந்திரத் தெய்வமான செலீனின் 2ஆம் நூற்றாண்டு சிற்பம்: தொடர்புடைய லத்தீன் பெயர்கள் லூனா, வெஸ்பர் மற்றும் லூசிஃபர். லூசிஃபர் என்பது "காலை நட்சத்திரம்" என்பதற்கான இலத்தீன் பெயர்[1], இது மார்கஸ் டெரென்டியஸ் வர்ரோ (கிமு 116-27), சிசெரோ (கிமு 106-43) மற்றும் பிற ஆரம்ப இலத்தீன் எழுத்தாளர்களின் படைப்புகளில் காணப்படுவது போல், உரைநடை மற்றும் கவிதை இரண்டிலும் உள்ளது.

விவிலியத்தின் பிசாசு பாத்திரமாக லூசிபர்

தொகு

லூசிபர் கிறிஸ்தவ மதத்தில் தீமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. லூசிஃபர் ஒரு தேவதையாக இருந்தபோது, சாத்தானை அல்லது பிசாசைக் குறிப்பிடுவதாக சிலரால் நம்பப்பட்டது. ஆனால் அது இலத்தீன் மொழியில் 'ஒளியைக் கொண்டுவருபவர்' என்று குறிப்பிட்டுள்ளது. லூசிஃபர் என்ற சொல இலத்தீன் மொழியில் "காலை நட்சத்திரம்", வீனஸ் கோள் என்று பொருள்பட பயன்படுத்தப்பட்டது. மேலும் இந்த லூசிஃபர் எனும் சொல் ஏசாயா நூலின் இலத்தீன் பதிப்பில் பயன்படுத்தப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kohler, Kaufmann (2006). Heaven and Hell in Comparative Religion with Special Reference to Dante's Divine Comedy. Whitefish, Montana: Kessinger Publishing. pp. 4–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7661-6608-2. Lucifer, is taken from the Latin version, the Vulgate[தொடர்பிழந்த இணைப்பு] Originally published New York: The MacMillan Co., 1923.
  2. "Latin Vulgate Bible: Isaiah 14". DRBO.org. Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.
  3. "Vulgate: Isaiah Chapter 14" (in லத்தின்). Sacred-texts.com. Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசிபர்&oldid=4102714" இலிருந்து மீள்விக்கப்பட்டது