சாத்தானிய நூல்

சாத்தானின் நூல் என்பது அமெரிக்க நாட்டவரான அன்டன் லாவே என்பவர் சமயமின்மை குறித்து 1969இல் எழுதிய நூலாகும். இந்நூல் சாத்தானை போற்றும் சாத்தானிய இயககத்தவர்களின் திருச்சபையினர்க்கான முதன்மை நூலாக கருதப்படுகிறது. இது சாத்தானியத்தின் அடிப்படைக் கொள்கைகளை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பாகும். இது சாத்தானை வழிபடுவது பற்றிய நூல் அல்ல. சாத்தானிக் விவிலியத்தில் உள்ள சாத்தான் என்பது ஆபிரகாமிய சமயங்களின் கட்டுப்பாடான விதிகளிலிருந்து விடுபடுவதுடன், விடுதலைக்கான ஒரு சின்னமாகும். சாத்தானிய நூல் கடவுள் மற்றும் பிசாசு இல்லை என்று போதிக்கிறது. அதற்குப் பதிலாக தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும்படி மக்களை ஊக்குவிக்கிறது.[1]

சாத்தானின் நூல்
நூலாசிரியர்அன்டன் லாவே
மொழிஆங்கிலம்
பொருண்மைகள்சாத்தானியம்
வெளியீட்டாளர்ஆவென் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1969
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்272
ISBN978-0-380-01539-9
அடுத்த நூல்சாத்தானின் மாயஜாலம்

நூலின் அமைப்பு

தொகு

சாத்தானின் புத்தகம்நான்கு புத்தகங்களால் ஆனது: சாத்தானின் புத்தகம், தி புக் ஆஃப் லூசிபர், தி புக் ஆஃப் பெலியால் மற்றும் தி புக் ஆஃப் லெவியதன். சாத்தானின் புத்தகம் பத்துக் கட்டளைகள் மற்றும் பொன் விதிகள் ஆகியவற்றுக்கு சவால் விடுகிறது. மேலும் இந்நூல் சமயமின்மைக் கொள்கையை ஊக்குவிக்கிறது.[2] 12 அத்தியாயங்கள் கொண்ட இந்நூல் இன்பம், காதல், வெறுப்பு மற்றும் பாலுறவு போன்ற தலைப்புகளைப் பற்றி விவாதிக்கிறது. சமயத்தைச் சுற்றியுள்ள வதந்திகளை அகற்ற நூலாசிரியர் அன்டன் லாவே வலியுறுத்துகிறார்.

விமர்சனங்கள்

தொகு

சாத்தானிக் விவிலியத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான எதிர்மறை விமர்சனங்கள் உள்ளது. அவரது தத்துவங்கள் பெரும்பாலும் கடன் வாங்கப்பட்டவை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.[3][4] பள்ளிகள், பொது நூலகங்கள் மற்றும் சிறைச்சாலைகளில்[5][6] இவரது நூலைத் தடைசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. [7][8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

துணை நூல் பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தானிய_நூல்&oldid=3937446" இலிருந்து மீள்விக்கப்பட்டது