லூனா 1 சோவியத் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட விண்கலம். இது ஜனவரி 2 1959 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

கோள வடிவில் அமைந்த இக்கலத்தில் ஐந்து அன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது சந்திரனின் மேற்பரப்பில் மோதுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.

லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் (escape velocity) தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் இக்கலம் ஒரு செயற்கை வால்வெள்ளி (comet) போலத் தோற்றமளித்தது. மிகவும் பிரகாசமான இவ்வாயுக்கலவை இந்து சமுத்திரத்திற்கு மேலாகத் தெரிந்தது. லூனா 1 சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 5995 கிமீ தூரத்துக்குள் ஜனவரி 4இல் எட்டியது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூனா_1&oldid=3227527" இருந்து மீள்விக்கப்பட்டது