லூப் நகர்பேசி
லூப் நகர்பேசி (Loop Mobile, முன்னதாக பிபிஎல் நகர்பேசி, BPL Mobile), வழமையாக லூப் என்றழைக்கப்படும் இந்த நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ள ஓர் நிறுவனமாகும். 21 மாநிலங்களில் தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் உரிமத்தைப் பெற்றுள்ள இந்நிறுவனம் தற்போது இராசத்தான், பஞ்சாப் , அசாம், கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள், மும்பை, மத்தியப் பிரதேசம், அரியானா, ஒடிசா மாநிலங்களில் ஜிஎஸ்எம் முறைமையில் முன்கட்டண, பின்கட்டண சேவைகளை வழங்கி வருகிறது.[2][3]
வகை | தனியார்த்துறை |
---|---|
நிறுவுகை | பிபிஎல் நகர்பேசியாக 1994 லூப் நகர்பேசியாக 2009 |
தலைமையகம் | மாகிம், மும்பை, மகாராட்டிரம் |
முதன்மை நபர்கள் | தலைமை செயல் அதிகாரி: சந்தீப் பாசு[1] |
தொழில்துறை | தொலைதொடர்புத் துறை |
உற்பத்திகள் | நகர்பேசி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் |
உரிமையாளர்கள் | கைதான் குழுமம் (100%) |
இணையத்தளம் | www.loopmobile.in |
சந்தாதாரர்கள் எண்ணிக்கை
தொகுலூப் நகர்பேசியின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை - சூலை 2011இல்:-
- மும்பை - 3,160,263
- அரியானா - 95
- கொல்கத்தா - 1,344
- மத்தியப் பிரதேசம் - 100
- ஒடிசா - 592
- பஞ்சாப் - 125
- இராசத்தான் - 243
- வட கிழக்கு இந்தியா - 20
- அசாம் - 97
மொத்தமாக 3,260,000 (ஏறத்தாழ.) அல்லது இந்தியாவிலுள்ள மொத்த நகர்பேசிகளில் 0.50% (ஏறத்தாழ.) [4]
சான்றுகோள்கள்
தொகு- ↑ SANDIP BASU JOINS LOOP TELECOM AS CEO, 17 August 2009, பார்க்கப்பட்ட நாள் 8 August 2011
{{citation}}
: Unknown parameter|pub=
ignored (|publisher=
suggested) (help) - ↑ BPL Mobile Renamed Loop Mobile:Loop Telecom and the need for a unified brand, medianama.com, 18 March 2009, பார்க்கப்பட்ட நாள் 8 August 2011
- ↑ LOOP TELECOM, loopmobile.inaccessdate=8 August 2011
- ↑ "Cellular Subscriber Statistics for July 2011". Archived from the original on 2010-09-02. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.