லூய்கி கால்வானி

லூயி கால்வானி (/ɡɑːlˈvɑːni/;[1] Italian: [ɡalˈvaːni]; இலத்தீன்: Aloysius Galvanus; 9 செப்டம்பர் 1737 – 4 டிசம்பர் 1798) ஒரு இத்தாலிய நாட்டவர் ஆவார். இவர் ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளர், மருத்துவர், இயற்பியல் ஆராய்ச்சியாளர் மற்றும் தத்துவவாதி ஆவார்.[2]

லூயி கால்வானி
மருத்துவர் கால்வானி
பிறப்பு(1737-09-09)9 செப்டம்பர் 1737
போலோக்னா, திருத்தந்தை நாடுகள்
இறப்பு4 திசம்பர் 1798(1798-12-04) (அகவை 61)
போலோக்னா, திருத்தந்தை நாடுகள்
பணியிடங்கள்போலோக்னா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமின்னாற்றல் சிகிச்சை

கண்டுபிடிப்பு

தொகு

இவர் மின்னாற்றல் சிகிச்சையின் முன்னோடி எனவே உயிர் மின்காந்த அலையியல் துறையில் அறியப்படுபவர். 1780 ஆம் ஆண்டு இவர் இறந்த தவளையின் கால் தசைகளில் மின்னாற்றலை செலுத்தி சோதனை செய்யும் போது அதன் கால் திருகியதைக் கொண்டு மின் காரணிகள் தசைகளை தூண்டும் என கண்டுபிடித்தார்.[3]:67–71 இதுவே உயிர் மின்னாற்றல் துறையில் பல ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் வர காரணமாக இருக்கிறது. இந்த துறையில் திசுக்கள், தசைகள் மற்றும் நரம்புகளுக்கு இடையே செயல்படும் மின் சமிக்ஞைகளைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

கால்வானியின் மனைவி கால்வானியின் தனித்துவ ஆராய்ச்சிகளை ஊக்குவித்தும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார். தாம் இறக்கும் வரை தனது கணவனான கால்வானிக்கு ஆலோசனை வழங்கி, கலந்தாய்வு செய்து வந்தார். இந்த காலகட்டத்தில் இவருக்கு அறிவியல் சார்ந்த மதிப்பு கிடைக்கவில்லை தன் கணவனுடைய ஆய்வகத்திலேயே கழித்தார்.[4]

 
மின் முனைகள் தவையின் காலில் பட்டவுடன் அதன் கால்கள் மேல்புறமாக இழுக்கப்படுதல்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Galvani". Random House Webster's Unabridged Dictionary.
  2. Bresadola, Marco (15 July 1998). "Medicine and science in the life of Luigi Galvani". Brain Research Bulletin 46 (5): 367–380. doi:10.1016/s0361-9230(98)00023-9. https://archive.org/details/sim_brain-research-bulletin_1998-07-15_46_5/page/367. 
  3. Whittaker, E. T. (1951), A history of the theories of aether and electricity. Vol 1, Nelson, London
  4. https://www.encyclopedia.com/people/medicine/medicine-biographies/luigi-galvani
  5. David Ames Wells, The science of common things: a familiar explanation of the first, 323 pages (page 290)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூய்கி_கால்வானி&oldid=3682285" இலிருந்து மீள்விக்கப்பட்டது