லெமன் ட்ரீ ஹோட்டல்கள்

லெமன் ட்ரீ ஹோட்டல்கள், (Lemon Tree Hotels) இந்தியாவிலுள்ள விடுதித் தொடர் ஆகும். இது 2002 ஆம் ஆண்டில் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 80 நடுத்தர மற்றும் உயர் ரக அளவிலான விடுதிகளையும் அவற்றின் தோராயமாக 8000 அறைகளையும், இந்நிறுவனம் நிர்வகிக்கிறது.[1]

லெமன் ட்ரீ ஹோட்டல்
நிறுவுகை2002
அமைவிட எண்ணிக்கை18 ஹோட்டல்கள் (2011)
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
இணையத்தளம்www.lemontreehotels.com

வரலாறு

தொகு

லெமன் ட்ரீ ஹோட்டல்கள் 2002 ஆம் ஆண்டு, பட்டு கேஸ்வானியால் நிறுவப்பட்டது. சூன் 2004 ஆம் ஆண்டில், குர்கான் பகுதியில் முதல் லெமன் ட்ரீ ஹோட்டல் நிறுவப்பட்டது.[2] இது குர்கானின் உத்யோக் விகார் பகுதியில் 49 அறைகளைக் கொண்ட விடுதியாக உள்ளது.[3]

செலவு குறைப்பு நடவடிக்கைகள்

தொகு

ஒவ்வொரு அறைகளிலும் கட்டப்பட்ட படுக்கைகள் இருப்பதால் வேலையாட்கள் சுத்தம் செய்யும் நேரம் மிச்சமாகிறது. இதனால் பல மணி நேரம் மற்றும் தேவையற்ற செலவுகள் குறைக்கப்படுகின்றன. இதன் முதல் விடுதியான குர்கான் பகுதியில் உள்ள விடுதியானது 49 அறைகளுடன் 320 சதுர மீட்டர்களுக்குப் பதில் 240 சதுர மீட்டர்கள் அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

லெமன் ட்ரீ குழுமத்தில் இருந்து அடுத்து வரக்கூடிய விடுதிகள்

தொகு
  1. லெமன் ட்ரீ ஹோட்டல், சண்டிகர் (ஏற்கனவே மார்ச் 2012 இல் திறக்கப்பட்டது)
  2. லெமன் ட்ரீ ஹோட்டல், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், புது தில்லி
  3. லெமன் ட்ரீ ஹோட்டல், கிழக்கு குர்கான்
  4. லெமன் ட்ரீ ஹோட்டல், மும்பை
  5. லெமன் ட்ரீ ஹோட்டல், சிட்டி சென்டர், புனே
  6. லெமன் ட்ரீ மவுண்டன் வியூ ரிசார்ட், சிம்லா

தில்லியில் உள்ள லெமன் ட்ரீ விடுதிகள்

தொகு
  1. லெமன் ட்ரீ பிரீமியர் தில்லி ஏரோசிட்டி[4]
  2. ரெட் பாக்ஸ் ஏரோசிட்டி
  3. ரெட் பாக்ஸ் ஹோட்டல் – கிழக்கு தில்லி

குறிப்புகள்

தொகு
  1. "Lemon Tree to grow in other cities". rediff.com.
  2. "Lemon Tree Hotel Gurgaon". Lemontreehotels.com.
  3. "Lemon Tree Hotels' Audacious Plan". Forbesindia.com.
  4. "Lemon tree Hotels in New Delhi". cleartrip.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெமன்_ட்ரீ_ஹோட்டல்கள்&oldid=3477575" இலிருந்து மீள்விக்கப்பட்டது