லேடீஸ் அன்ட்ஜென்டில்வுமன்
லேடீஸ் அன்ட் ஜென்டில்வுமன் (Ladies and Gentlewomen ) இது தமிழ் மொழியில் வந்துள்ள ஆவணப்படமாகும் மாலினி ஜீவரத்னம் இயக்கிய இதனை பா. ரஞ்சித் தயாரித்துள்ளார்.[4]. ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கை, காதல் மற்றும் தற்கொலை போன்றவற்றை பேசுகிறது.[5] இதில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கான பாடல் ஒன்றை தந்துள்ளார்.[6] மேலும் தமயந்தி, குட்டி ரேவதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[7][8]
லேடீஸ் அன்ட்ஜென்டில்வுமன் | |
---|---|
இயக்கம் | மாலினி ஜீவரத்னம் [1] |
தயாரிப்பு | பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்சன்ஸ் |
இசை | ஜஸ்டின் பிரபாகரன் |
ஒளிப்பதிவு | விபின் குமார் வாமெர்[2] |
வெளியீடு | சனவரி 2017(சென்னை ரெயின்போ) 21 சனவரி 2018 (India) |
ஓட்டம் | 47 நிமிடங்கள்[3] |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம், தமிழ் |
கதை
தொகுதிஜா மற்றும் பிஜா ஆகிய இருவரின் வாழ்க்கையை இந்த ஆவணப் படம் விவரிக்கிறது, ராஜஸ்தானில் இருந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் கதையையும், தமிழ்நாட்டின் வாய்வழிக்கதையாக சொல்லப்பட்டு வந்த பாப்பாத்தி மற்றும் கருப்பாயி ஆகியவர்களைப் பற்றி பேசுகிறது.[9]. சமூகத்தில் வாழும் சமூகச் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ,வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களில் அகனள், அகனன், ஈரர், திருனர் போன்றோர் உள்ளடங்கியிருப்பார்கள் [10] ஓரினச் சேர்க்கையாளர்களை ஆணவக் கொலைகளிலிருந்து தடுப்பதும், விந்தையான மனிதர்களாக அவர்களை பார்க்காமலிக்கச் செய்வதும், அவர்களின் தற்கொலை முயற்சியைத் தடுப்பதுவுமே தனது முக்கிய நோக்கமென இயக்குநர் தெரிவித்திருந்தார்.[11][12]
தயாரிப்பு
தொகுஓராண்டுக்கும் மேற்பட்டு இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு முடிவில் இப்படத்தை முடிக்க மூன்றாண்டுகள் ஆகி விட்டதென இயக்குநர் தெரிவித்திருந்தார். ஓரினச் சேர்க்கையாளர்களும் இறப்பும், அவர்களின் வேதனையும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டுமென்பதே தனது முக்கிய குறிக்கோளாக இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.[13]. 85க்கும் மேற்பட்ட இது போன்ற விந்தையான பெண்களை தனது ஆராய்ச்சியில் சந்தித்ததாகவும், அவர்களில் பெரும்பாலோனோர் தங்களை வெளிப்படுத்திட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கிறார்.[10] 2017 சனவரி 8 அனறு சென்னையில் நடைபெற்ற ரெயின்போ திரைப்பட விழாவில் இது திரையிடப்பட்டது .[14]
விருதுகள்
தொகுநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்பட விருதினை பெற்றது , புனே இண்டர்நேஷனல் விந்தைத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தகுதி பெற்றது. மேலும் உலக அளவில் பல பாராட்டுகளை இது பெற்றது.[7] இந்த ஆவணப்படம் ஏழு வெவ்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அதில் சிறந்த ஆவணப்படமாக மூன்று விருதுகளை பெற்றுள்ளது..[15] சென்னை இண்டர்நேஷ்னல் விந்தைத் திரைப்பட விழா, பெங்களூரு இண்டர்நேஷனல் விந்தைத் திரைப்பட விழா, ஹைதரபாத் இண்டர்நேஷனல் விந்தைத் திரைப்பட விழா போன்றவற்றில் இது பலரது பாராட்டையும் பெற்றது.[16]
- 2017 சென்னை ரெயின்போ திரைப்பட விழா[17]
- வெற்றி: சிறந்த ஆவணப்படம்
- 2017 நார்வே தமிழ்த் திரைப்பட விழா
- வெற்றி: சிறந்த ஆவணப்படம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Shajini S R (1 Aug 2017). "LGBTQ art fest blurs boundaries, garners ovation". பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2017.
- ↑ https://www.imdb.com/name/nm6934933/?ref_=fn_al_nm_1
- ↑ Priya Menon (3 Dec 2016). "A rich fare for Chennai rainbow film fete". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
- ↑ "from Chennai, an anthem for lesbian love". 2 April 2017.
- ↑ "When love is gay and sundry". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/chennai/2017/jul/28/when-love-is-gay-and-sundry-1634986--1.html.
- ↑ "It ends with a hug". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
- ↑ 7.0 7.1 "Watch: This Tamil lesbian anthem is a challenge to all those who are illiberal about love". 7 April 2017.
- ↑ "Pa Ranjith launches 'Ladies and Gentlewomen', story of queen meets queen". The News Minute. 2018-01-17. https://www.thenewsminute.com/article/pa-ranjith-launches-ladies-and-gentlewomen-story-queen-meets-queen-74879.
- ↑ "'Ladies And Gentlewomen' – Malini Jeevarathnam Helms A Documentary About Lesbian Relationships". Archived from the original on 2019-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
- ↑ 10.0 10.1 Vijayta Lalwani (7 April 2017). "Malini Jeevarathnam – Bringing Lesbian Rights to the Fore". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
- ↑ KaeLyn (9 April 2017). "Sunday Funday Is Swiping Left on LGBTQ Discrimination". பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2017.
- ↑ "Queer Film Festival brings 88 unusual works to city". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2018-03-20.
- ↑ M Suganth (31 March 2017). "This Lesbian Anthem sings a tune of change".
- ↑ "3RD CHENNAI RAINBOW FILM FESTIVAL HELD FROM 4TH TO 8TH JAN". 13 January 2017.
- ↑ "Pushing boundaries: 88 films from 30 countries at Bengaluru Queer Film Festival". The News Minute. 2018-03-07. https://www.thenewsminute.com/article/pushing-boundaries-88-films-30-countries-bengaluru-queer-film-festival-77589.
- ↑ "A queer carnival to remember" (in en). www.deccanchronicle.com/. 2017-09-12. https://deccanchronicle.com/lifestyle/viral-and-trending/120917/a-queer-carnival-to-remember.html.
- ↑ "Celebrating queer pride". The Hindu. 27 July 2017. பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2017.