லேலண்டு எண்
எண்கோட்பாட்டு இயலில், லேலண்டு எண் (Leyland number ) என்பது xy + yx என்னும் வடிவில் எழுதத்தக்க முழு எண். x , y ஆகிய இரண்டும் 1 என்னும் எண்ணைக் காட்டிலும் பெரியதாக இருத்தல் வேண்டும்.[1] பால் லேலண்டு என்பவர் கண்டுபிடித்த எண் வகை என்பதால் லேலண்டு எண் என்று பெயர் பெற்றது. முதல் சில லேலண்டு எண்களாவன:
.
x , y ஆகிய இரண்டும் 1 என்னும் எண்ணைக் காட்டிலும் பெரியதாக இருத்தல் வேண்டும் என்னும் விதி இன்றியமையாதது, இல்லாவிடில் ஒவ்வொரு நேர்ம (பாசிடிவ்) எண்ணும் லேலண்டு எண்ணாகிவிடும்: x1 + 1x. மேலும் கூட்டல் என்பது முறைமாற்றக்கூடியது (commutative) என்பதால், இரண்டுமுறை ஒரே எண்ணைப் பெறாமலிருக்க x ≥ y என்னும் விதியையும் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.எனவே 1 < y ≤ x என்று கொள்வது பொருந்தும்.
முதல் சில பகா எண் அல்லது பகாத்தனி எண்களாக உள்ள லேலண்டு எண்கள்:
- 17, 593, 32993, 2097593, 8589935681, 59604644783353249, 523347633027360537213687137, 43143988327398957279342419750374600193 (A094133)
மேலே குறித்துள்ள எண்களைக் கீழ்க்காணுமாறு பெறலாம்:
- 32+23, 92+29, 152+215, 212+221, 332+233, 245+524, 563+356, 3215+1532.[2]
ஜூன் 2008 வரையிலுமான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பகா எண்ணாக உள்ள லேலண்டு எண், 26384405 + 44052638 ஆகும். இது 15071 இலக்கங்கள் கொண்ட பெரிய எண்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ Richard Crandall and Carl Pomerance (2005), Prime Numbers: A Computational Perspective, Springer
- ↑ "Primes and Strong Pseudoprimes of the form xy + yx". Paul Leyland. Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2007-01-14.