லே வருவாய் வட்டம்
லே வருவாய் வட்டம், லடாக் லடாக் ஒன்றியத்தில் உள்ள லே மாவட்டத்தில் அமைந்த 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டத்தின் தலைமையிடமாக லே நகரம் உள்ளது. இவ்வருவாய் வட்டத்தில் லே நகராட்சி, சுக்லாம் கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் ஸ்பிதுக் கணக்கெடுப்பு ஊரும் மற்றும் 61 கிராமங்களும் கொண்டுள்ளது.[2]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, லே வருவாய் வட்டம் 15,497 குடியிருப்புகளும், 93,961 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. அதில் ஆண்கள் 56,597 மற்றும் 37,364 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 660 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.88% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 62,813 ஆகவும்; பட்டியல் சமூகத்தவர்கள் 395 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பௌத்தர்கள் 65.54%, இந்துக்கள் 19.69%, இசுலாமியர்கள் 12.06%, சீக்கியர்கள் 1.06%, கிறித்தவர்கள் 0.57% மற்றும் பிறர் 1.08% ஆக உள்ளனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் இலடாக்கிய மொழி, இந்தி, ஆங்கிலம் பேசுகின்றனர்.[3]