லைலா ஐதாரி
லைலா ஐதாரி (Laila Haidari) ஆப்கானிய செயற்பாட்டாளர் மற்றும் உணவகம் வைத்துள்ள தொழில் அதிபராவார். 2010 ஆம் ஆண்டு ஆப்கானித்தான் நாட்டின் காபூல் நகரில் போதை மறுவாழ்வு மையமான மதர் கேம்ப் என்ற நிறுவனத்தை நடத்துகிறார். தனது உயிரை பணயம் வைத்து இந்த தனியார் புனர்வாழ்வு மையத்தை நடத்தி, ஆண்டுக்கு நுற்றுக்கும் மேற்பட்ட போதைப்பொருள் அடிமைகளுக்கு உதவி வருகிறார். மதர் கேம்ப் நிறுவனத்திற்கு நிதியளிக்கும் விதமாக காபூலில் தாச் பேகம் என்ற சிற்றுண்டியகத்தையும் இவர் வைத்திருக்கிறார். தாச் பேகம் சிற்றுண்டியகம் பல தடைகளை உடைப்பதால் அடிக்கடி அங்கு அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இச்சிற்றுண்டியகம் ஒரு பெண்ணால் நடத்தப்படுகிறது, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதிக்கிறது. பாலத்தில் லைலா என்ற 2018 ஆம் ஆண்டு ஆவணப்படத்தின் பொருளாக லைலா ஐதாரி இருந்தார்.
லைலா ஐதாரிLaila Haidari | |
---|---|
பிறப்பு | 1978 (அகவை 45–46) குவெட்டா, பாக்கித்தான் |
தேசியம் | ஆப்கானித்தான் |
பணி | செயற்பாட்டாளர், தொழிலதிபர் |
சுயசரிதை
தொகுஆரம்பகால வாழ்க்கை, திருமணம் மற்றும் கல்வி
தொகுலைலா ஐதாரி 1978 ஆம் ஆண்டு பாக்கித்தானின் குவெட்டா நகரத்தில் ஓர் ஆப்கானித்தான் குடும்பத்தில் பிறந்தார் [1] கைக்குழந்தையாக இருந்தபோது, இவரது குடும்பம் ஈரானுக்கு அகதிகளாக சென்றது.[1] ஒரு குழந்தை மணப்பெண்ணாக மாறியபோது , லைலா ஐதாரிக்கு 12 வயதாகும். முப்பது வயது முல்லாவுக்கு லைலா திருமணம் செய்து வைக்கப்பட்டார்.[1] 13 வயதில் இவருக்கு முதல் குழந்தை பிறந்தது.[1] இந்த தம்பதியருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் பிறந்தனர்.[1][2]
இவரது கணவர் மத வகுப்புகள் எடுக்க அனுமதித்தபோது, லைலா இரகசியமாக மற்ற பாடங்களைப் படிக்கத் தொடங்கினார். திரைப்படத் தயாரிப்பில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார்.[3]
லைலா ஐதாரி தனது 21 வயதில் கணவரை விவாகரத்து செய்தார்.[4] இசுலாமியச் சட்டப்படி, குழந்தைகள் தங்கள் தந்தையுடன் வாழ்ந்தனர்.[3]
தொழில் மற்றும் செயல்பாடு
தொகுலைலா ஐதாரி 2009 ஆம் ஆண்டு ஆப்கானித்தானுக்குச் சென்றார்.[1] காபூலில் இவருடைய சகோதரர் அக்கீம், நூற்றுக்கணக்கான போதைக்கு அடிமையான நபர்களுடன் புல்-இ-சொக்தா பாலத்தின் கீழ் வாழ்வதைக் கண்டார்.[5] தன் சகோதரனின் நிலையால் தூண்டப்பட்டு ஆப்கானித்தானில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பிரச்சனை மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கு அரசு நடத்தும் தங்குமிடங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு லைலா போதைக்கு அடிமையானவர்களுக்கான ஒரு மறுவாழ்வு மையத்தை நிறுவினார். மதர் கேம்ப் எனப்படும் அம்மா முகாம் என்று மையத்திற்குப் பெயரிட்டார்.[6] அம்மா முகாம் அரசு நிதியையோ வெளிநாட்டு உதவியையோ பெறுவதில்லை.[2][6] இது நகரின் ஒரே தனியார் போதை மருந்து மறுவாழ்வு மையம் ஆகும்.[6]
2011 ஆம் ஆண்டில், அம்மா முகாமிற்கு நிதியளிப்பதற்காக காபூலில் லைலா தாச் பேகம் என்ற உணவகத்தைத் திறந்தார்.[6][3] இந்த உணவகம் ஆப்காத்தானில் பெண்களால் நடத்தப்படும் ஓர் அபூர்வமான உணவகமாகும்.[7] திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக அமர்ந்து சமூகமயமாக்கலுக்கான ஓர் இடத்தை இம்மையம் வழங்குகிறது. ஆனால் உள்ளூர் சமூகத்தில் ஒரு கலாச்சார தடையாக கருதப்பட்டது.[3] உணவகத்தில் அம்மா முகாமில் வாழ்ந்த நபர்கள் வேலை செய்கிறார்கள்.[5] லைலா ஐதாரியின் உணவகத்தில் பல சமயங்களில் காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதால் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐதாரி எப்போதும் தலைக்கு முக்காடு அணிவதில்லை, ஏனெனில் இவர் ஒரு பெண் தொழிலதிபர்.[8]
லைலா ஐதாரி ஆப்கானித்தானில் தலிபான்கள் இருப்பதை எதிர்த்துப் பேசினார். நாட்டில் பெண்களின் உரிமைகளுக்கு அது அளிக்கும் அச்சுறுத்தல்களையும் எதிர்த்தார்.[8][9][10][11] ஆப்கானித்தானில் நடந்து வரும் போருக்கான அமைதி நடவடிக்கையில் பெண்களை சேர்க்கவில்லை என ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார்.[3][8]
2019 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஓசுலோ சுதந்திர மன்றத்தில் லைலா ஐதாரி அழைக்கப்பட்ட பேச்சாளராக இருந்தார்.[12][13]
பாலத்தில் லைலா
தொகுலைலா ஐதாரி எலிசபெத் மற்றும் குலிசுதான் மிர்சாய் இயக்கிய லைலா அட் தி பிரிட்ச்சு என்ற ஆவணப்படத்தின் கருபொருளாக இருந்தார்.[14] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திரைப்பட விழாவில் இப்படத்திற்கு பேக்ட் விருது கிடைத்தது. இது 34 வது ஆண்டு சாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழாவில் ஆவணப்படத்திற்கான சமூக நீதி விருதையும் வென்றது.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Nordlinger, Jay (2019-08-08). "An Independent Woman". National Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.Nordlinger, Jay (2019-08-08). "An Independent Woman". National Review. Retrieved 2020-03-10.
- ↑ 2.0 2.1 Pan, Sevara (2018-10-23). "Laila, mother of the addicts". Modern Times Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "She’s a Force of Nature, and She Just Declared War on Peace With the Taliban". 2019-02-15. https://www.nytimes.com/2019/02/15/world/asia/afghanistan-taliban-peace.html.Nordland, Rod (2019-02-15). "She's a Force of Nature, and She Just Declared War on Peace With the Taliban". The New York Times. ISSN 0362-4331. Retrieved 2020-03-13.
- ↑ Lacey, Liam (2018-04-28). "Review: 'Laila at the Bridge'". POV Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
- ↑ 5.0 5.1 "In Afghanistan, ‘Mother’ has her own approach to helping drug addicts". 2016-10-13. https://www.csmonitor.com/World/Making-a-difference/2016/1013/In-Afghanistan-Mother-has-her-own-approach-to-helping-drug-addicts.Kumar, Ruchi (2016-10-13). "In Afghanistan, 'Mother' has her own approach to helping drug addicts". Christian Science Monitor. ISSN 0882-7729. Retrieved 2020-03-14.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "Inside Mother Camp: the woman tackling Afghanistan's drug problem". 2019-01-02. https://www.theguardian.com/global-development/2019/jan/02/inside-mother-camp-the-woman-tackling-afghanistans-drug-problem.Kumar, Ruchi (2019-01-02). "Inside Mother Camp: the woman tackling Afghanistan's drug problem". The Guardian. ISSN 0261-3077. Retrieved 2020-03-13.
- ↑ Mehrdad, Ezzatullah (2018-12-21). "Defying the odds as a woman entrepreneur in Afghanistan". Global Voices (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
- ↑ 8.0 8.1 8.2 "Afghan Women Fear Peace With Taliban May Mean War on Them". 2019-01-27. https://www.nytimes.com/2019/01/27/world/asia/taliban-peace-deal-women-afghanistan.html.Nordland, Rod; Faizi, Fatima; Abed, Fahim (2019-01-27). "Afghan Women Fear Peace With Taliban May Mean War on Them". The New York Times. ISSN 0362-4331. Retrieved 2020-03-14.
- ↑ "The War On Afghan Women". Al Jazeera. 2019-08-29. Archived from the original on 2020-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
- ↑ Nordlinger, Jay (2019-10-10). "Looking Hard at the Afghan War". National Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
- ↑ Mengli, Ahmed; Yusufzai, Mushtaq; Smith, Saphora; De Luce, Dan (2019-07-10). "U.S.-Taliban talks inch America closer to withdrawing from Afghanistan". NBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
- ↑ Piene, Bibiana (2019-05-27). "Profilerte journalister til toppmøte i Oslo". Journalisten (in நார்வேஜியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
- ↑ Oslo Freedom Forum (2019-07-17). "Fighting the Devastating Consequences of War | Laila Haidari | 2019". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
- ↑ Lodge, Guy (2018-03-23). "Swedish Doc 'The Raft' Leads Winners at CPH:DOX Fest". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.
- ↑ Bennett, Anita (2019-02-10). "'Babysplitters' and 'In Love and War' Among Santa Barbara International Film Festival Winners". Deadline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-14.