லைலா மஜ்னு (1949 திரைப்படம்)

பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

லைலா மஜ்னு 1949 ஆண்டில் வெளிவந்த தெலுங்கு வரலாற்றுத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும். பி. எஸ். ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேசுவரராவ், பானுமதி முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். பாடல்களுக்கு சி. ஆர். சுப்பராமன் இசையமைத்திருந்தார்.[1] தமிழ்த் திரைப்படத்தில் வசனங்களையும் பாடல்களையும் எஸ். டி. சுந்தரம் எழுதியிருந்தார்.[1]

லைலா மஜ்னு
பேசும் படம் விளம்பரம்
இயக்கம்பி. எஸ். இராமகிருஷ்ணா
தயாரிப்புபி. எஸ் ராமகிருஷ்ணா
பரணி கலையகம்
கதைசமுத்ராலா (தெலுங்கு திரைக்கதை / வசனம்)
எஸ். டி. சுந்தரம் தமிழ் வசனம்
மூலக்கதைசூஃபியின் லைலா-மஜ்னு
திரைக்கதைபி. எஸ் ராமகிருஷ்ணா
இசைசி. ஆர். சுப்பராமன்
நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ்
பானுமதி ராமகிருஷ்ணா
ஒளிப்பதிவுபி. எசு. ரங்கா
படத்தொகுப்புபி. எஸ். இராமகிருஷ்ணா
கலையகம்வாகினி, ஸ்டார் கம்பைன்சு
வெளியீடு5 நவம்பர் 1949 (1949-11-05)
ஓட்டம்169 நிமி
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு, தமிழ்

நடிகர்கள்

தொகு

தகவல்கள்

தொகு

லைலா மஜ்னு திரைக்கதை ஊமைப் படமாக முதலில் 1922 ஆம் ஆண்டில் ஜே. ஜே. மதன் தயாரிப்பிலும், பின்னர் 1927 இல் மணிலால் ஜோசியின் இயக்கத்திலும் வெளிவந்தது. 1931 ஆம் ஆண்டில் கஞ்சிபாய் ரத்தோட் இயக்கத்தில் இந்தியில் பேசும் படமாக வெளிவந்தது. ஜே. ஜே. மதன் 1931 இல் மீண்டும் இந்தியில் வெளியிட்டார். 1936 இல் ஈஸ்ட் இந்தியா பிக்சர்சு பாரசீக மொழியில் வெளியிட்டது. 1940 இல் தர்மவீர் சிங் பஞ்சாபி மொழியில் வெளியிட்டார். 1941 இல் பஷ்தூ மொழியில் வெளியிடப்பட்டது. 1945 இல் சுவரன் லதா, நசீர் அகமது ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது.

1949 அக்டோபரில் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டு, பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1949 நவம்பரில் வெளியிடப்பட்டது. 1950 இல் எஃப். நாகூரின் இயக்கத்தில் லைலா மஜ்னு என்ற பெயரில் டி. ஆர். மகாலிங்கம், எம். வி. ராஜம்மா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. இதே திரைக்கதை 1953 இலும், 1976 இலும் (இந்தி, வங்காளம்), பின்னர் 1982 இலும் வெளிவந்தன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 M. L. Narasimhan (1 September 2012). "Laila majnu (1949)". தி இந்து. Archived from the original on 24-05-2017. பார்க்கப்பட்ட நாள் 31-01-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. Guy, Randor (19-02-2012). "Leila Majnu 1950". தி இந்து. Archived from the original on 14-08-2014. பார்க்கப்பட்ட நாள் 24-05-2017. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைலா_மஜ்னு_(1949_திரைப்படம்)&oldid=4117128" இலிருந்து மீள்விக்கப்பட்டது