லோபாமுத்திரை

லோபாமுத்திரை (Lopamudra என்று அழைக்கப்படுவார். அகத்திய முனிவரின் பத்தினியும், உருக்கு வேத கால பெண் முனிவரும் ஆவார். லோபாமுத்திரை என்பதற்கு, லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள் எனப் பொருளாகும். இளே காவிரி நதியாக அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து தமிழ்நாட்டை நாேக்கிப் பாய்கிறாள்.தமிழை காக்க இவர்கள் அவதரித்தவர்கள்.

லோபாமுத்திரை
அகத்தியர் & லோபாமுத்திரை
தகவல்
துணைவர்(கள்)அகத்தியர்

பண்டைய இந்திய வேத கால இலக்கியங்களின் படி, இருக்கு வேத காலத்தில் (பொ.ஊ.மு. 2600–1950) வாழ்ந்த லோபமுத்திரை பெண் வேத மெய்யிலாளர் ஆவார். இருக்கு வேதத்தில் லோபமுத்திரையின் மந்திரங்கள் உள்ளது.[1][2]

வேதம் இதிகாச, புராணங்களில் மூன்று இடங்களில் லோபமுத்திரை பற்றிய செய்திகள் உள்ளது. இருக்கு வேத மந்திரங்களிலும், மகாபாரத இதிகாசத்தில், வன பருவம், அத்தியாயம் 96, 97 & 98-இல் தான் திருமணம் செய்து கொள்வதற்காக, அகத்தியர், லோபமுத்திரையைப் படைத்து,[3] பின் குழந்தை லோப முத்திரையை பருவ வயது அடையும் வரை, விதர்ப்ப நாட்டு மன்னரிடம் வளர்ப்பதற்கு கொடுத்தார். பின் லோபாமுத்திரை பருவ வயது எய்திய பின் லோபமுத்திரையை அகத்தியர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.[4]

லோபாமுத்திரை – அகத்தியர் இணையருக்கு பிறந்தவர் திரிதாசுயு ஆவார். கவிஞரான திரிதாசுயு உருக்க்கு வேதத்தில் சில மந்திரங்களை இயற்றியுள்ளார்.[2]

அகத்தியருடன் இணைந்து லோபாமுத்திரை லலிதா சகஸ்ரநாமத்தை பரத கண்டம் முமுவதும் பரப்பினார்.

இருக்கு வேதத்தில் தொகு

இருக்கு வேத காலத்திய 27 பெண் ரிஷிகளில் லோபாமுத்திரை 179 மந்திரங்களைப் படைத்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Swami & Irāmaccantiraṉ 1993, ப. 242.
  2. 2.0 2.1 Pandharipande, Dr. Rajeshwari. "A Possible Vision of Lopamudra!". themotherdivine.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2015.
  3. "Encyclopedia for Epics of Ancient India: Lopamudra". பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  4. லோபாமுத்திரையை உருவாக்கிய அகஸ்தியர்!

ஆதார நூற்பட்டியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபாமுத்திரை&oldid=3594347" இலிருந்து மீள்விக்கப்பட்டது