லோமாய்விட்டி மாகாணம்

லோமாய்விட்டி மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது பிஜியின் கிழக்குப் பிரிவைச் சேர்ந்தது. லோமாய்விட்டி தீவுக்கூட்டத்தின் தீவுகள் இம்மாகாணத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுள் இம்பட்டிக்கி, காவு தீவு ஆகியன குறிப்பிடத்தக்கன.

மக்கள் தொகு

இங்கு 16,461 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 8,651 பேர் ஆண்கள், 7,810 பெண்கள் ஆவர். 15,022 பிஜியர்களும், 494 பிஜி இந்தியர்களும், 945 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள் தொகு

  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோமாய்விட்டி_மாகாணம்&oldid=3570364" இலிருந்து மீள்விக்கப்பட்டது