ழான் தெலூஷ்

பிரஞ்சு ஆசிரியர், ஆய்வாளர்

ழான் தெலூஷ்[1] (Jean Deloche, 19 செப்டம்பர் 1929 - 3 திசம்பர் 2019) என்பவர் ஒரு பிரெஞ்சு ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்தின் வரலாறு மற்றும் தொல்பொருளியல் மையத்தின் பொறுப்பாளராக இருந்தவர். [2]

ழான் தெலூஷ்
பிறப்பு19 செப்டம்பர் 1929
பிரான்சு, கிரேண்ட் பொர்னாண்ட்
இறப்பு3 திசம்பர் 2019(2019-12-03) (அகவை 90)
இந்தியா, புதுச்சேரி (நகரம்)
தேசியம்பிரெஞ்சு
பணிஆய்வாளர்
ஆசிரியர்

வரலாறுதொகு

ழான் தெலூஷ் 1951 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் கால்நடையாக பயணம் மேற்கொண்டபோது முதன்முதலில் இந்தியாவுக்கு வந்தார். இவர் 1954 இல் பிரான்சுக்கு திரும்பியதும் வரலாற்றைப் பயிலத் தொடங்கினார். [3] 1961 முதல் 1962 வரை, கம்போடியாவின் சியெம் ரீப்பில் உள்ள இரண்டாம் சூர்யவர்மன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 1962 முதல் 1966 வரை, மெட்ராஸ் அலையன்ஸ் ஃபிரான்சைஸின் இயக்குநராக இருந்தார். 1966 ஆம் ஆண்டில், இவர் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு கீழ்த்திசைப் பள்ளியில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். இவர் பாண்டிச்சேரியில் சுயாதீனமாக கூடுதலாக ஆராய்ச்சிகளை செய்தார். 1982 இல், கலை மற்றும் மனிதநேயம் குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். 1992 முதல் 1994 இறுதி வரை, இவர் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு கீழ்த்திசைப் பள்ளியின் வரலாறு மற்றும் தொல்பொருளியத்துக்கு பொறுப்பாளராக பணியாற்றினார். இவர் பிரஞ்சு கீழ்த்திசைப் பள்ளி மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தின் இணை உறுப்பினராக இருந்தார்.

ழான் தெலூஷ் 3 திசம்பர் 2019 அன்று இறந்தார். [4]

ஆராய்ச்சிதொகு

தெலூச் தனது வாழ்க்கை முழுவதும் வரலாற்றின் இரண்டு வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தினார்: இந்தியாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாறு தொடர்பான 18 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு கையெழுத்துப் பிரதிகளைப் பதிப்பித்தல் மற்றும் இந்திய தொழில்நுட்பத்தின் வரலாறு பற்றிய ஆய்வு. குறிப்பாக போக்குவரத்து, இராணுவம், கடல் தொழில்நுடபங்கள். இவரது ஆய்வுகள் இந்திய வரலாற்றில் மறைந்த பல பகுதிகளை கண்டறிந்தன. மேலும் இது இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் பல தொடர்புகளை உருவாக்கியது. கூடுதலாக, இவர் போசாளப் பேரரசின் இராணுவ நுட்பங்கள் குறித்த ஆய்வுகளை ஐகானோகிராஃபிக் ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்கொண்டார். [5] இவர் கோட்டைகள் குறித்த ஆய்வில் தனிச்சிறப்பு பெற்றவர். செஞ்சிக் கோட்டை குறித்த இவரது ஆய்வு நூல் குறிப்பிடத்தக்கது. திருப்புடைமருதூர் கோயிலில் உள்ள நாயக்கர் காலச் சுவர் ஓவியங்கள் குறித்து இவர் எழுதிய நூல் இத்துறைசார்ந்த ஆய்வாளர்களுக்கு வழிகாட்டி நூலாக கருதப்படுகிறது.[1]

2008 ஆம் ஆண்டில், பாரிசில் உள்ள அகாடெமி டெஸ் இன்ஸ்கிரிப்ஷன்ஸ் மற்றும் பெல்லஸ்-லெட்டிரெஸ் வழங்கிய பிரிக்ஸ் ஹிராயமாவை டெலோசைப் பெற்றார். [6]

எழுதிய நூல்கள்தொகு

  • ஆரிஜின்ஸ் ஆஃப் தி அர்பன் டெவலப்மென்ட் ஆஃப் பாண்டிச்சேரி அக்கார்டிங் டு செவன்டீன்த் சென்ச்சுரி
  • செஞ்சி: எ ஃபோர்டிஃபைட் சிட்டி ஆஃப் தமிழ் கன்ட்ரி
  • ஸ்டடீஸ் ஆன் ஃபோர்டிஃபிகேஷன் ஆஃப் இந்தியா
  • அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ழீன்-பாப்டிஸ்ட் செவாலியர் இன் ஈஸ்டர்ன் இந்தியா
  • ஃபோர் ஃபோர்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்.
  • எ ஸ்டடி ஆஃப் நாயக்கா-பீரியட் சோஷியல் லைஃப்: திருப்புடைமருதூர் பெயின்டிங்ஸ் அண்டு கார்விங்க்ஸ்

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ழான்_தெலூஷ்&oldid=3227653" இருந்து மீள்விக்கப்பட்டது