வக்கார் சலாம்கெய்ல்

துடுப்பாட்டக்காரர்

வக்கார் சலாம்கெய்ல் (பிறப்பு 2 அக்டோபர் 2001) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . இவர் மார்ச் 2019 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக தனது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இ

உள்நாட்டு மற்றும் டி 20 தொழில் தொகு

நவம்பர் 19, 2017 அன்று 2017–18 ஆண்டிற்கான அஹ்மத் ஷா அப்தாலி 4 நாள் போட்டியில் பேண்ட்-இ-அமீர் பிராந்தியத்திற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார், இரண்டாவது ஆட்டப் பகுதியில் 162 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[2] மொத்தம் 55 இலக்குகளை அந்தத் தொடரில் இவர் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார்.[3]

செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் காந்தஹார் அணி சார்பாக இவர் விளையாடினார்.[4] 6 அக்டோபர் 2018 அன்று 2018–19 ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் காந்தஹார் நைட்ஸ் அணிக்காக இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[5] 2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவு பட்டியலில் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், இவர் கொமிலா விக்டோரியன் அணியில் இடம் பெற்றார்.[6]

ஜூலை 2019 இல், யூரோ டி 20 ஸ்லாம் துடுப்பாட்டப் போட்டியில் போட்டியின் தொடக்க பதிப்பில் எடின்பர்க் ராக்ஸிற்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[7][8] இருப்பினும், அடுத்த மாதம் அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது.[9] செப்டம்பர் 2019 இல், 2019 மென்சி சூப்பர் லீக் போட்டிக்கான டிஷ்வானே ஸ்பார்டன்ஸ் அணியில் இவர் இடம் பெற்றார்.[10]

செப்டம்பர் 10, 2019 அன்று நடந்த 2019 காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் பேண்ட்-இ-அமீர் பிராந்தியத்திற்காக இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[11]

சர்வதேச வாழ்க்கை தொகு

பிப்ரவரி 2019 இல், இந்தியாவில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[12][13] இவர் மார்ச் 15, 2019 அன்று அயர்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[14] அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் முதல் ஆட்டப் பகுதியில் 14 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்கள் கொடுத்தார். இதில் நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.17 ஓவர்கள் 66 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் அப்கானித்தான் அணி 7 இலக்குகளில் வெற்றி பெற்றது.[15]

2019 ஆம் ஆண்டில் ஐசிசி துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டித் தொடரில் இவர் விளையாடினார். சூன் 29, லீட்ஸ் துடுப்பாட்ட மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சகீன் ஷா அப்ரிதி பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பக்கித்தான் துடுப்பாட்ட அணி 3 இலக்குகளில் வெற்றி பெற்றது.

குறிப்புகள் தொகு

 1. "Waqar Salamkheil". http://www.espncricinfo.com/ci/content/player/1108490.html. 
 2. "11th Match, Alokozay Ahmad Shah Abdali 4-day Tournament at Khost, Nov 19-22 2017". http://www.espncricinfo.com/ci/engine/match/1124066.html. 
 3. "2017–18 Ahmad Shah Abdali 4-day Tournament: Most Wickets". http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=12122;type=tournament. 
 4. "Gayle, Afridi, Russell: icons in Afghanistan Premier League". http://www.espncricinfo.com/story/_/id/24639625/chris-gayle,-shahid-afridi,-andre-russell-icons-afghanistan-premier-league. 
 5. "2nd Match (D/N), Afghanistan Premier League at Sharjah, Oct 6 2018". http://www.espncricinfo.com/ci/engine/match/1160570.html. 
 6. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19" இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190328104022/http://www.tigercricket.com.bd/2018/10/29/full-players-list-of-the-teams-following-players-draft-of-bpl-t20-2018-19/. 
 7. "Eoin Morgan to represent Dublin franchise in inaugural Euro T20 Slam". https://www.espncricinfo.com/story/_/id/27222261/eoin-morgan-represent-dublin-franchise-inaugural-euro-t20-slam. 
 8. "Euro T20 Slam Player Draft completed" இம் மூலத்தில் இருந்து 19 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190719163945/https://www.cricketeurope.com/DATABASE/ARTICLES2019/articles/000010/001060.shtml. 
 9. "Inaugural Euro T20 Slam cancelled at two weeks' notice". https://www.espncricinfo.com/story/_/id/27387389/inaugural-euro-t20-slam-cancelled-two-weeks-notice. 
 10. "MSL 2.0 announces its T20 squads" இம் மூலத்தில் இருந்து 4 செப்டம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190904081427/https://cricket.co.za/news/31555/MSL-20-announces-its-T20-squads. 
 11. "Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Amanullah, Sep 10 2019". http://www.espncricinfo.com/ci/engine/match/1200017.html. 
 12. "Mujeeb left out for Ireland Test, Shahzad out of T20Is". http://www.espncricinfo.com/story/_/id/25943168/mujeeb-left-ireland-test-shahzad-t20is. 
 13. "No Mujeeb in Tests as Afghanistan announce squads for Ireland series". https://www.icc-cricket.com/news/1048994. 
 14. "Only Test, Ireland tour of India at Dehra Dun, Mar 15-19 2019". http://www.espncricinfo.com/ci/engine/match/1168120.html. 
 15. "Full Scorecard of Afghanistan vs Ireland Only Test 2019 - Score Report | ESPNcricinfo.com" (in en). https://www.espncricinfo.com/series/19052/scorecard/1168120/afghanistan-vs-ireland-only-test-afg-v-ire-2018-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்கார்_சலாம்கெய்ல்&oldid=3670228" இருந்து மீள்விக்கப்பட்டது