வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம்

வங்கதேசத்தில் உள்ள மிகப்பெரிய விலங்கு காட்சியகம்

வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம் (Bangladesh National Zoo) வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில், அதனுடைய உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் அமைந்துள்ளது. இந்நாட்டைத் தாயகமாகக் கொண்ட விலங்குகளும், பிற நாடுகளைச் சேர்ந்த விலங்குகளும் இவ்விலங்குக் காட்சியகத்தில் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மூன்று மில்லியன் பார்வையாளர்கள் இவ்விலங்ககத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர். டாக்கா விலங்குக் காட்சியகம் என்ற பெயர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் அன்று வங்காளதேச தேசிய விலங்குக்காட்சியகம் என்று பெயர் மாற்றப்பட்டது[2]

வங்காளதேசத்தின் தேசிய விலங்குக்காட்சியகம்
Zoo Entrance
Map
23°48′46″N 90°20′41″E / 23.812674°N 90.3446102°E / 23.812674; 90.3446102
திறக்கப்பட்ட தேதி23 சூன் 1974[1]
அமைவிடம்மிர்பூர், டாக்கா, வங்காளதேசம்
நிலப்பரப்பளவு186 ஏக்கர்கள் (75 ha)[1]
விலங்குகளின் எண்ணிக்கை2150[1]
உயிரினங்களின் எண்ணிக்கை191[1]
ஆண்டு பார்வையாளர்கள்3,000,000[1]
முக்கிய கண்காட்சிகள்இராயல் பெங்கால் புலி, உப்புநீர் முதலை, இம்பாலா, ஈமு, தபிர், கருப்புக் கரடி

வங்காளதேசத்தின் மிகப்பெரிய விலங்குக்காட்சியகமாக 186 ஏக்கர் பரப்பளவில் 1974 ஆம் ஆண்டு டாக்கா விலங்குக்காட்சியகம் நிறுவப்பட்டது.. மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை[3] அமைச்சகம் இப்பூங்காவை நிர்வகித்து வந்தது. தினந்தோறும் 10000 பர்வையாளர்கள் வந்து போகுமிடமாக விளங்கிய இவ்விலங்ககத்திற்கு வாரக்கடைசி[4] விடுமுறை நாட்களில் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகமாக இருந்தது. இங்கு வாழும் விலங்குகளுக்குப் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்பதும் , இங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் ஊழல் மிகுந்திருந்தது[5] என்பதாலும் விலங்குக்காட்சியத்தின் பெயருக்கு மாசு ஏற்பட்டிருந்தது.

டாக்கா விலங்குக்காட்சியகத்தின் ஓராண்டிற்கான நிதி ஒதுக்கீடு 37.5 மில்லியன் இட்டாக்காக்கள் ஆகும். இத்தொகையில் 25 மில்லியன் இடாக்காக்கள் விலங்குகளின் உணவுக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

டாக்காவில் ஒரு விலங்குக்காட்சியகம் அமைக்கப்படும் என்று 1950 ஆண்டு டிசம்பர் 26 அன்று வங்கதேச விவசாயம் மற்றும் நிதியுதவி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவ்வறிவிப்பைத் தொடர்ந்து டாக்கா உயர்நீதி மன்றத்திற்கு அருகில் விலங்குக்காட்சியகம் தொடங்கப்பட்டது. புள்ளி மான்கள், குரங்குகள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் மட்டும் தொடக்கத்தில் அங்கு இருந்தன. பின்னர் இந்த இருப்பிடம் தற்போது இருக்குமிடமான ஈத்கா மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அதிகமான விலங்குகள் இங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டன.[6]. 1961 ஆம் ஆண்டு இக்காட்சியகத்தை சரியான முறையில் நிர்வகிக்கு வாரியம் அமைக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விலங்குகள் மேலும் பல சேர்க்கப்பட்டு தற்போதைய இருப்பிடத்தில் 23 சூன் 1974 இல் முறையாகத் தொடக்க விழா நடத்தப்பட்டது[7].

விலங்குகள்

தொகு

134 இனங்களைச் சேர்ந்த 2150 விலங்குகள் தற்போது இவ்விலங்குக் காட்சியகத்தில் வாழ்கின்றன[1].

யானைகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், வரிக்குதிரைகளை, நீர்மான்கள் நீர்நாய், கழுதைப்புலி, மான், ஒட்டகச்சிவிங்கி, இம்பாலா, கருப்பு கரடிகள் தாபிர்பன்றிகள், நீர்யானை, சிங்கங்கள், குரங்குகள், சிம்பான்சிகள், பபூன் மற்றும் வங்கப்புலிகள் போன்ற 58 இனப்பாலூட்டிகள் இங்கு இருந்தன[8]

மயில்கள், ரியா, ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள், நியுகினி வகைத் தீக்கோழிகள், ஆந்தைகள், தீக்கோழி, ஈமுக்கள், கிளுவைகள், வானம்பாடிகள்,, பிதற்றல், ஆந்தைகள், கழுகுகள், மற்றும் கழுகுகள் போன்ற 91 இனங்களைச் சேர்ந்த 1500 பறவைகள் இங்கு வாழ்ந்தன. ஒவ்வொரு குளிர்காலத்திலும் நீர்ப்பறவைகளின் இடப்பெயர்ச்சிகு இங்கிருந்த இரண்டு ஏரிகள் பெரிதும் உதவின[8].

இவை தவிர இங்கு பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட 13 வகை ஊர்வன விலங்குகள், 28 வகையான மீனினங்களும் உள்ளன[8]

 
விலங்குக் காட்சியகத்தில் ஒரு முதலை

நடவடிக்கைகள்

தொகு

யானை முதுகில் சவாரி, குதிரை முதுகில் சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற சில தினசரி நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்காக இங்கு நடைபெறுகின்றன.

மதிப்பீடு

தொகு

2009 ஆம் ஆண்டு இவ்விலங்குக் காட்சியகத்திலிருந்த பல விலங்குகள் இறந்துவிட்டன. இதைத் தொடர்ந்து விலங்ககத்தின் காப்பாட்சியரும் துணைக் காப்பாட்சியரும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இறப்புக்கான காரணங்களை புலனாய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டது. போதுமான அளவிற்கு கால்நடை மருத்துவர்கள் இல்லாமையே இந்த இறப்புகளுக்கு காரணமென்றும், ஏற்கனவே கூடுதலாக மருத்துவப்பணியாளர்கள் தேவை என்று சுட்டிக்காட்டப்பட்டதாகவும் நிர்வாகப்பிரிவில் தெரிவிக்கப்பட்டது[4]

2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து டாக்காவிற்கு இரண்டு கருப்பு காண்டாமிருகங்கள் அனுப்பப்பட்ட போது, பூங்காவில் ஊழல் நடைபெறுகிறது என சர்வதேச முகமை தெரிவித்தது. தென் ஆப்ரிக்காவினைச் சேர்ந்த பாதுகாப்பு குழு இப்பூங்காவின் சிகிச்சை முறைகளைக் குறிப்பிட்டு பூங்கவை ஒரு நரகத் துளை என்று் கவலை தெரிவித்தது.

படக்காட்சியகம்

தொகு

குறிப்புரைகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Historical Places: Dhaka Zoo". dhakacity.org. Dhaka City Corporation. Archived from the original on 4 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. ঢাকা-চিড়িয়াখানার-নাম-পরিবর্তন-করে-‘বাংলাদেশ-জাতীয়-চিড়িয়াখানা’তে-রূপান্তর।[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Dhaka Zoo". world66.com. World66: The Travel Guide You write. 2 April 2007. Archived from the original on 1 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.
  4. 4.0 4.1 "Dhaka Zoo prepares to welcome holiday visitors". bdnews24.com. bdnews24.com. 20 September 2009. Archived from the original on 28 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Parveen, Shahnaz (6 July 2009). "Death lurks in Dhaka Zoo". The Daily Star. The Daily Star. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=95624. பார்த்த நாள்: 29 February 2016. 
  6. <http://www.amadershomoys.com/content/2014/03/08/middle0248.htm>
  7. <http://www.amadershomoyi.com/content/2014/02/19/middle0183.htm பரணிடப்பட்டது 2014-03-05 at the வந்தவழி இயந்திரம்>
  8. 8.0 8.1 8.2 "Dhaka Zoo - View Diverse Wildlife in a Natural Environment". bangladesh.com. Bangladesh.Com. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.

வெளி இணைப்புகள்

தொகு