வங்காளத்தின் மூசா கான்

பரோ-புயான்கள் கூட்டமைப்பின் தலைவர்

மூசா கான் (Musa Khan; ஆட்சி. 1599-1610) தனது தந்தை ஈசா கான் இறந்ததைத் தொடர்ந்து வங்காளத்தின் பரோ-புயான்கள் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.

மூசா கான்
வங்காளத்தின் பரோ-புயான்கள் கூட்டமைப்பின் தலைவர்
ஆட்சிக்காலம்1599–1611
இறப்பு1623
டாக்கா
புதைத்த இடம்
பாக்-இ-மூசா-கான்
குழந்தைகளின்
பெயர்கள்
மசூம் கான்[1]
மரபுசங்கல்பரி கோட்டை
தந்தைஈசா கான்
மதம்இசுலாம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு
 
டாக்கா பல்கலைக்கழகத்தில் உள்ள மூசா கான் மசூதியில் உள்ள மூசா கானின் கல்லறை

மூசா கான் சரையில் ஒரு வங்காள முஸ்லிமான ஈசா கானுக்கும் இப்ராகிம் தேனிசுமந்தின் மகள் பாத்திமா பீபி என்பவருக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். [2] [3] இவரது தாத்தா, பைசு இராஜ்புத்திரக் குலத்தைச் சேர்ந்த பகீரத், வங்காள சுல்தான் கியாசுதீன் மக்மூத் சாவிடம் திவானாக பணியாற்ற அயோத்தியிலிருந்து குடிபெயர்ந்தார். கானின் தாத்தா காளிதாசு கசுதானியும் திவானாகப் பணியாற்றினார். மேலும், இப்ராகிம் தேனிசுமாந்தின் வழிகாட்டுதலின் கீழ் இசுலாத்தை ஏற்றுக்கொண்டு சுலைமான் கான் என்ற பெயரையும் பெற்றார். [4] சுலைமான் சுல்தானின் மகள் சையதா மொமேனா காதுனை மணந்தார். மேலும்,ம் சரைலின் தோட்டங்களை மூசா கானின் தந்தைக்கு வழங்கினார். மூசா கானுக்கு அப்துல்லா கான் மற்றும் மக்மூத் கான் என்ற இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். இவரது தாய்வழி உறவினர் அலாவுல் கானுடன், மூசா கான் முகலாயர்களுக்கு எதிராகப் போரிட்டபோது அவர்கள் மூவரும் இவருக்கு உதவினார்கள். இவருக்கு இலியாசு கான் என்ற மற்றொரு சகோதரரும் இருந்தார். அவர் பின்னர் முகலாயர்களிடம் சரணடைந்தார்.

தொழில்

தொகு
 
மூசா கானின் மகனால் கட்டப்பட்ட மூசா கானின் கல்லறை

1599 இல் இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, மூசா கான் சோனார்கானின் அரியணையைப் பெற்றார். மேலும், பதியின் பரந்த நிலப்பரப்பையும் பெற்றார். பின்னர், வங்காளத்தின் பரோ-புய்யன் நிலப்பிரபுக்களின் தலைவருமானார். தனது தந்தையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முகலாயப் படையெடுப்பை எதிர்த்தார், 10 ஜூலை 1610 வரை, இவர் பேரரசர் ஜஹாங்கீர் மற்றும் வங்காள சுபாவின் இராணுவத் தளபதியான இசுலாம் கான் சிசுடி மற்றும் சுபாதார் ஆகியோரால் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுபாதார் இப்ராகிம் கான் பத்-இ-சாங்கின் (1617-1624) தலையீட்டின் காரணமாக, மூசா கான் இருந்து விடுவிக்கப்பட்டார். முகலாயப் படைக்கு விசுவாசமாக இருந்து திரிபுராவின் வெற்றியிலும் காம்ரூபத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்குவதிலும் இவர் தீவிரமாக பங்கேற்றார்.

இறப்பு

தொகு

மூசா கான் 1623 இல் ஜஹாங்கிர்நகர் நகரில் இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் மாசும் கான் ஆட்சிக்கு வந்தார். அவர் பாக்-இ-முசா-கான் (மூசா கானின் தோட்டம்) என்று அழைக்கப்படும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். மூசா கான் மசூதி ஒன்று கட்டப்பட்டது. கல்லறை மற்றும் மசூதி டாக்கா பல்கலைக்கழகத்தின் இன்றைய குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Cite Banglapedia
  2. Karim, Nurul (1954), S. Moinul Haq (ed.), "Role of 'Isa Khan in the History of East Pakistan", Journal of the Pakistan Historical Society, Pakistan Historical Society, p. 129
  3. Taifoor, Syed Muhammed (1965), Glimpses of Old Dhaka: a short historical narration of East Bengal and Aassam, S. M. Perwez, p. 94
  4. Hussainy Chisti, Syed Hasan Imam (1999), Sharif Uddin Ahmed (ed.), "Arabic and Persian in Sylhet", Sylhet: History and Heritage, Bangladesh Itihas Samiti, p. 600, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-984-31-0478-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளத்தின்_மூசா_கான்&oldid=3837084" இலிருந்து மீள்விக்கப்பட்டது