வங்காள புதர் வானம்பாடி
வங்காள புதர் வானம்பாடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மிராப்ரா
|
இனம்: | மி. அசாமிகா
|
இருசொற் பெயரீடு | |
மிராப்ரா அசாமிகா கோர்சுபீல்டு, 1840 | |
வங்காள புதர் வானம்பாடி பரம்பல் |
வங்காள புதர் வானம்பாடி (Bengal bush lark)(மிராப்ரா அசாமிகா) அல்லது வங்காள வானம்பாடி என்ற சிற்றினம் இலார்க் வகையில் ஆலதிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது.
வகைப்பாட்டியல்
தொகுமிராப்ரா பேரினத்தில் உள்ள வேறுபாடுகள் பெரும்பாலும் மிகவும் நுட்பமானவை.
வங்காள புதர் வானம்பாடி முன்பு பல இனக்குழுக்களாக வகைப்படுத்தப்பட்டது. வங்காள இனக்குழு அசாமிக்கா எனவும் சென்னை இனக்குழு அபினிசு எனவும் அறியப்பட்டது. இவை பின்னர் இவற்றின் குரல், பண்புகள் அடிப்படையில் புதர் வானம்பாடி (மிராப்ரா அபினிசு) மற்றும் அசாமிகா எனப் பிரிக்கப்பட்டன. முன்பு, பர்மியப் புதர் வானம்பாடி மற்றும் புதர் வானம்பாடி ஆகிய இரண்டும் வங்காள புதர் வானம்பாடியின் துணையினங்களாகக் கருதப்பட்டன (முறையே மி. அ. மைக்ரோப்டெரா மற்றும் மி. அ. அபினிசு). "செம்பழுப்பு-இறகு புதர் வானம்பாடி" என்ற மாற்றுப் பெயர் சிவப்பு-இறகு வானம்பாடியினை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது.[2] வங்க புதர் வானம்பாடியின் மற்றொரு மாற்றுப் பெயர் செம்பழுப்பு இறகு வானம்பாடி ஆகும்.[3]
விளக்கம்
தொகுவங்காள புதர் வானம்பாடி குட்டை வாலுடன் வலுவான தடிமனான அலகினைக் கொண்டது. இது வானம்பாடியைப் போல நீளமானது அல்ல. இதனுடைய உடல் நீளம் சுமார் 15 சென்டிமீட்டர்வரை இருக்கும். இது மேலே இருண்ட கோடுகள் கொண்ட சாம்பல் நிறமாகவும், கீழே கொப்பளமாகவும், மார்பகத்திலும் கண்ணின் பின்புறத்திலும் புள்ளிகள் இருக்கும். இறக்கைகள் செம்பழுப்பு நிறமுடையன.
வங்காள புதர் வானம்பாடியின் ஓசை மெல்லிய ஒலியெழுத்து குறிப்புகளுடன் கூடியது.[4]
பரவலும் வாழிடமும்
தொகுவங்காள புதர் வானம்பாடி இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றது. வங்களதேசம், பூட்டான், இந்தியா, மியான்மார் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. உலக அளவில் 100,000-1,000,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது.[1]
வங்காள புதர் வானம்பாடி வறண்ட, திறந்த, கற்கள் நிறைந்த நாடுகளில் பெரும்பாலும் அரிதான புதர்கள் மற்றும் பயிரிடப்பட்ட பகுதிகளில் காணப்படும் பொதுவான பறவையாகும்.
நடத்தை மற்றும் சூழலியல்
தொகுஇது தரையில் கூடு கட்டி, புள்ளிகள் கொண்ட மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடுகிறது . இந்த வானம்பாடி முதன்மை உணவாக விதைகள் மற்றும் பூச்சிகளை உண்கிறது.
படங்கள்
தொகு-
இந்தியாவின் கொல்கத்தாவில்
-
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Mirafra assamica". IUCN Red List of Threatened Species 2017: e.T22734352A118710813. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22734352A118710813.en. https://www.iucnredlist.org/species/22734352/118710813. பார்த்த நாள்: 10 January 2020.
- ↑ "Mirafra hypermetra - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
- ↑ "Mirafra assamica - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ Alström, Per (1998). "Taxonomy of the Mirafra assamica complex". Forktail 13: 97–107. http://www.orientalbirdclub.org/publications/forktail/13pdfs/Alstrom-Mirafra.pdf. பார்த்த நாள்: May 1, 2009.
வெளி இணைப்புகள்
தொகு- இனங்கள் தகவல் - பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல்