வங்கிகளுக்கிடை பிணையம்
வங்கிகளுக்கிடை பிணையம், அல்லது தன்னியக்க வங்கி இயந்திர நட்பமைப்பு (ATM consortium) அல்லது தன்னியக்க வங்கி இயந்திர பிணையம் (ATM network), என்ற கணினி பிணையம் தனது நட்பமைப்பில் உறுப்பினராக உள்ள நிதிய நிறுவனங்களால் வழங்கப்பட்ட தன்னியக்க இயந்திர அட்டைகளை நட்பமைப்பின் மற்றொரு உறுப்பினரால் நிறுவப்பட்ட தன்னியக்க இயந்திரங்களில் பயன்படுத்த உதவுகிறது.
இருப்பினும், மாற்றார் தன்னியக்க வங்கி இயந்திரத்தில் என்னென்ன வசதிகளைப் பெறலாம் என்பது மாறுபடுகிறது. காட்டாக, செல்லிடத் தொலைபேசி மறுஊட்டம் பெறுதல் போன்ற சிறப்புச் சேவைகள் சொந்த வங்கி தன்னியக்க இயந்திரத்தில் மட்டுமே சாத்தியப்படும்; மாற்றார் வங்கி அட்டைகளுக்கு இந்த வசதிக்கான அணுக்கம் இருக்காது.
தாங்கள் இருப்பு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் இல்லாதவிடங்களில் வேறு வங்கியின் ஏடிஎம் மூலம் வங்கி அட்டைகளைப் பயன்படுத்த இந்தப் பிணையம் உதவுகிறது. இது வெளியூர்/வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பன்னாட்டளவில் பரவலாக அமைந்துள்ள வங்கிகளுக்கிடை பிணையங்களான பிளசு அல்லது சிர்ரசு போன்றவை இதற்கு உதவுகின்றன.
தவிரவும் விற்பனை முனைகளில் சிறப்பான மின்வழி நிதிமாற்று விற்பனை முனை கணிமுனையம் மூலமாக ஏடிஎம் அட்டைகளை பற்று அட்டைகளாக பயன்படுத்த வங்கியிடைப் பிணையங்கள் உதவுகின்றன.