வசுதேவர் தேவாலயம்
வசுதேவர் தேவாலயம் (Basudev Devalaya) இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பாரியில் உள்ள பலிகாரியா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்து கோவிலாகும். இக்கோவில் வசுதேவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1714-1744 ஆம் ஆண்டு காலத்தில் அகோம் மன்னர் சுதன்பா இக்கோவிலைக் கட்டினார்.[1][2]
வசுதேவர் தேவாலயம் Basudev Devalaya | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | அசாம் |
மாவட்டம்: | நல்பாரி மாவட்டம் |
அமைவு: | பாலிகரியா, நல்பாரி மாவட்டம், அசாம் |
ஆள்கூறுகள்: | 26°26′02.7″N 91°24′29.9″E / 26.434083°N 91.408306°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து கோவில் கட்டடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | சுதன்பா |
வரலாறு
தொகுவசுதேவர் தேவாலயத்தில் சுவாரசியமான ஒரு கதை இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, ஒருமுறை மீனவரின் மீன்பிடி வலை ஏழு நாட்களுக்கு செயமங்கல் பீல் எனப்படும் குளத்தில் சிக்கிக்கொண்டது. ஏழாவது நாளில், கடா ககர் என்ற உள்ளூர்வாசி, வசுதேவர் அந்த மீன்பிடி வலையிலிருந்து விடுபட விரும்புவதாகக் கனவு கண்டார். கனவு பற்றிய செய்தி அகோம் மன்னர் சுதன்பாவுக்கும் எட்டியது. உடனடியாக அந்த இடத்தில் இருந்த இரண்டு கற்களை அகற்ற அவர் முயன்றார். ஆனால், முயற்சி தோல்வியடைந்ததால் அங்கேயே வசுதேவருக்கு கோயிலைக் கட்டினார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "About Basudev Devalaya". Krishi Vigyan Kendra, Nalbari (in ஆங்கிலம்). Archived from the original on 2020-04-09. பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
- ↑ "Historical places in Nalbari district". Historical places - NALBARI-Zilla Parishad (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link)[தொடர்பிழந்த இணைப்பு]