வச்ரமுனி

இந்திய நடிகர்

சதானந்த சாகர் (Sadananda Sagar) (11 மே 1944 - 5 சனவரி 2006) இவரது மேடைப் பெயரான வச்ரமுனியால் நன்கு அறியப்பட்ட இவர், கன்னடத் திரைப் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகராவார்.[1] இவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதிகளில் எதிர்மறை கதாபாத்திரங்களை சித்தரித்தார். மேலும், கன்னடப் படங்களின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டார்.[2] இவரது தொழில் வாழ்க்கையில், இவர் "இடி முழங்கும் குரலாலும், நடிப்புத்திறனாலும்" அறியப்பட்டார். இது அவருக்கு 'நாத பைரவர்', 'நாத பயங்கரம்' போன்றப் பெயர்களைப் பெற்றுத் தந்தது [3]

வச்ரமுனி
பிறப்புசதானந்த சாகர்
(1944-05-11)11 மே 1944
கனகனபால்யா, பெங்களூர், மைசூர் அரசு,
பிரித்தானிய இந்தியா
இறப்பு5 சனவரி 2006(2006-01-05) (அகவை 61)
பெங்களூர், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிரசண்ட இராவணன்
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி

வச்ரமுனி ஒரு மேடை நடிகராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். கனகல் பிரபாகர் சாத்திரியின் 'பிரசண்ட இராவணன்' என்ற நாடகத்தில் இராவணனை சித்தரித்ததன் மூலம் புகழ் பெற்றார். 1969 ஆம் ஆண்டில் புட்டண்ணா கனகலின் மல்லமன பாவாடா என படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். 1970களில் வெளிவந்த சிப்பாயி ராமு (1972), சம்பதிகே சவால் (1974), பிரேமதா கனிகே (1976), பகதூர் காண்டு (1976), கிரி கன்யே (1977), சங்கர் குரு (1978) போன்ற ராஜ்குமாருடன் இணைந்து நடித்தது பரவலாகப் பாராட்டப்பட்டது [3] கன்னடத் திரைபடத்தில் இவர் செய்த பங்களிப்பிற்காக, 2006 இல் 'கன்னடத் திரைப்பட வாழ்நாள் பங்களிப்பு விருது' வழங்கப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

வச்ரமுனி 1944 மே 11 அன்று பெங்களூரின் கனகனபல்யாவில் சதானந்த சாகர் என்ற பெயரில் பிறந்தார். இவரது குடும்ப உறுப்பினர்கள் வச்ரமுனீசுவரரின் பக்தர்கள் என்பதால் இவருக்கு இந்தப் பெயரிடப்பட்டது. இவரது தந்தை வசரப்பா பெங்களூர் நகர நகராட்சியில் பணி புரிந்தார். பின்னர் அஞ்சனபுரத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் தனது வாழ்க்கையை கழித்தார்.

தொழில் தொகு

வசரமுனி கல்லூரிப் படிப்பை முடித்து, ஒளிப்பதிவில் பட்டம் பெற்றார். திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பைக்குச் சென்றார். கன்னட தொழில்முற நாடக அரங்கத்தைச் சேர்ந்த இவர், கனகல் பிரபாகர் சாத்திரி என்பவரின் பிரசண்ட இராவணன் என்ற நாடகத்தில் இராவணனாக நடித்ததன் மூலம் புட்டண்ணா கனகலை இவர் கவர்ந்தார். கனகல் 'சாவிரா மெட்டிலு என்ற படத்தில் இவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்கினார். இருப்பினும் படம் நிறுத்தப்பட்டது.

கனகல் இறுதியில் இவரை மல்லமனா பாவாடாவில் நடிக்க வைத்தார். இது ஒரு நடிகராக இவரது முதல் படமாக மாறியது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில் சிவாஜி கணேசனுடன் நடித்த உதய குமார் இந்தப் பாத்திரத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் புட்டன்னா மறுத்து வச்ரமுனியை நடிக்க வைத்தார். மயூரா, சம்பாதி சவால், தாரி தப்பிதா மகா, பிரேமதா கனிகே, கிரி கன்யே, சங்கர் குரு, ஆகாசுமிகா போன்ற பல படங்களில் ராஜ்குமருடன் வஜ்ரமுனி நடித்தார்.[4]

இறப்பு தொகு

நாள்பட்ட நீரிழிவு நோய் மற்றும் நீடித்த சிறுநீரக தொடர்பான நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்ட இவர்,2006 சனவரி 5 அன்று அதிகாலை 5:30 மணிக்கு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "This 'despicable villain' was a much loved star". Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.
  2. 2.0 2.1 "Vajramuni bio". Vokkaligara Sangha. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 4 October 2013.
  3. 3.0 3.1 "Tears for the villain". Deccan Herald. 15 January 2006. Archived from the original on 22 April 2017. பார்க்கப்பட்ட நாள் 22 April 2017.
  4. "Dr. Raj pays last tribute to Vajramuni". indiaglitz. 6 January 2006. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்ரமுனி&oldid=3505931" இலிருந்து மீள்விக்கப்பட்டது