வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ள தொடருந்து நிலையம்

வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம் (Vadakannikaapuram railway station) என்பது பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையை உள்ள ஒரு கிளைப் பாதையாகும்.[1] இது பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது.

வடகன்னிகாபுரம் தொடருந்து நிலையம்
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள மீனாட்சிபுரம்
கண்ணோட்டம்
நிலைசெயல்பாடுகிறது
உரிமையாளர்இந்திய இரயில்வே
முனையங்கள்
  • பாலக்காடு சந்திப்பு
  • பொள்ளாச்சி சந்திப்பு
சேவை
சுழலிருப்புWAP4, WDM2, WDG3, WDP3, WDM3
வரலாறு
திறக்கப்பட்டது1898
தொழில்நுட்பம்
தண்டவாளங்களின் எண்ணிக்கை1
தட அளவி5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை
பழைய அளவு1,676 mm (5 ft 6 in) Broad gauge and 1,000 mm (3 ft 3 38 in) metre gauge dual gauge (between Palakkad Junction and Palakkad Town Railway Station)
1,000 mm (3 ft 3 38 in) (between Palakkad Town Railway Station and Pollachi Junction)
மின்மயமாக்கல்பகுதி மின்மயம்

வரலாறு

தொகு

வடகன்னிகாபுரத்தில் 1898 இல் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகரத்திற்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது.[2] இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையின் பிரிவானது மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றபட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.[3] அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன.[3] 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்த பாதை அங்கீகரிக்கப்பட்டது.[4] முன்பு இந்த நிலையத்தில் நிறுத்தபட்டுவந்த ஐந்து விரைவு வண்டிகள் பின்னர் நிறுத்தபட்டன. ஆனால் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூர் செல்லும் தொடருந்து மட்டும் இங்கு நிறுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொடருந்து நிலையத்தை தெற்கு இரயில்வே மூட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Shaji, K.A. (21 April 2015). "Palakkad–Pollachi line gauge conversion over". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/palakkadpollachi-line-gauge-conversion-over/article7124560.ece. 
  2. "Indian Railways Living Atlas — India Rail Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
  3. 3.0 3.1 "CRS completes inspection of Pollachi–Palakkad BG line". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  4. "Pollachi – Palakkad BG line cleared for passenger train services". The Hindu: Mobile Edition. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  5. "பயணிகள் குறைந்ததால் எம்ஜிஆரின் சொந்த ஊரில் மூடப்படும் ரயில் நிலையம் @ கேரளா". Hindu Tamil Thisai. 2024-10-14. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.