வடக்கு ஐரோப்பா
வடக்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் வடக்கிலுள்ள் நாடுகளைக் குறிக்கும். வடக்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெப்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் பால்டிக் கடலோரமாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வரையறையின் படி பின்வரும் நாடுகள் வட ஐரோப்பிய நாடுகளாகக் கருதப்படுகின்றன:[1][2]
டென்மார்க்
எசுத்தோனியா
பின்லாந்து
ஐசுலாந்து
அயர்லாந்து குடியரசு
லாத்வியா
லித்துவேனியா
நோர்வே
சுவீடன்
ஐக்கிய இராச்சியம்

வடக்கு ஐரோப்பா
ஸ்கான்டினாவியா வட ஐரோப்பியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் புவியியல் உட்பிரிவு.