வடக்கு செங்கேளையாடு
வடக்கு செங்கேளையாடு | |
---|---|
வடக்கு செங்கேளையாடு (♀) தாய்லாந்தில், சூலை 2015-ல் காவோ யாய் தேசிய பூங்கா. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | முந்தியாகசு
|
இனம்: | மு. வேகினாலிசு
|
இருசொற் பெயரீடு | |
முந்தியாகசு வேகினாலிசு (போடார்ட்1785) | |
வடக்கு செங்கேளையாட்டின் (மு. வேகினாலிசு) மற்றும் தெற்கு சிவப்பு செங்கேளையாட்டின் (மு. முண்ட்ஜாக்) பரம்பல் |
வடக்கு செங்கேளையாடு (Northern red muntjac)[1][2] என்பது கேளையாடு சிற்றினமாகும். இது தென்-மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் காணப்படுகிறது.[1]
வகைப்பாட்டியல்
தொகுவடக்கு செங்கேளையாடு சமீபத்தில் தெற்கு செங்கேளையாட்டிலிருந்து (முன்னர் பொதுவாக இந்தியக் கேளையாடு என்று அறியப்பட்டது) வேறுபட்டதாகக் கண்டறியப்பட்டது. சுந்தாவிற்கு வெளியையும் மலேசியாவிற்கும் வெளியில் இருக்கும் மு. முண்ட்ஜாக்கிற்கு முன்னர் கூறப்பட்ட அனைத்து இனங்களையும் உள்ளடக்கியது.[1]
பேன்கானசு, மோண்டனசு, முண்ட்ஜாக், நைங்கோலனி, ரூபிதசு ஆகிய துணையினங்கள் தெற்கு செங்கேளையாட்டு சிற்றினத்திலும், அனாமென்சிசு, ஆரியசு, கர்வோஇசுடைலசு, கிராண்டிகோர்னிசு வடக்கு செங்கேளையாட்டு சிற்றினத்தின் கீழும் வகைப்படுத்தப்பட்டன.[3]
பரவல்
தொகுவடக்கு செங்கேளையாடு தென்-மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பன்னிரண்டு நாடுகளில் பாக்கித்தான், பூட்டான், மியான்மர், நேபாளம், இந்தியா, இலங்கை, வங்கதேசம், சீனா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1]
இது ஆங்காங்கிலும் உள்ளது. மலேசியாவில் இதன் இருப்பு நிச்சயமற்றது.[1]
பாதுகாப்பு
தொகுவடக்கு செங்கேளையாடு பாதுகாக்கப்பட்ட பெரும் பகுதிகளில் காணப்படுதல் மற்றும் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட மாற்றத்தை எதிர்க்கும் தன்மை ஆகியவற்றின் காரணமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக" எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Timmins, R.J.; Steinmetz, R.; Samba Kumar, N.; Anwarul Islam, Md.; Sagar Baral, H. (2016). "Muntiacus vaginalis". IUCN Red List of Threatened Species 2016: e.T136551A22165292. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T136551A22165292.en. https://www.iucnredlist.org/species/136551/22165292.
- ↑ https://www.biolib.cz/en/taxon/id600975/
- ↑ Groves, C. (2003). "Taxonomy of ungulates of the Indian subcontinent". Journal of the Bombay Natural History Society 100 (2–3): 341–362.