வடசேரி முத்தாரம்மன் கோயில்
முத்தாரம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பகுதியில் உள்ள அருகுவிளை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயில் ஆகும்.[1]
முத்தாரம்மன் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°11′57″N 77°25′30″E / 8.1992°N 77.4250°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கன்னியாகுமரி |
அமைவிடம்: | அருகுவிளை, வடசேரி அகஸ்தீஸ்வரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | நாகர்கோவில் |
மக்களவைத் தொகுதி: | கன்னியாகுமரி |
ஏற்றம்: | 57.25 m (188 அடி) |
கோயில் தகவல் | |
தாயார்: | முத்தாரம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள ஓட்டுக்கூரை வகை (2024 வரை) கருங்கல் கோபுரம் (15 டிசம்பர் 2024 அன்று குடமுழுக்கு செய்யப்பட்டது) |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற முறையில் பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. அருகுவிளை ஊர் மக்கள் சார்பாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுகிறது .
கோவிலின் பழைய ஓட்டுக் கூரை கட்டிடம் மாற்றப்பட்டு, புதிய கருங்கல் கோபுரம் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் குடமுழுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. இங்கு விநாயகர், நாகர், சாஸ்தா, பெருமாள், முத்தாரம்மன், சின்ன முத்தாள், பெரிய முத்தாள், உச்சிமாகாளி அம்மன், வைரவநாதன், வண்டிமலையன், வேதாளை பூதத்தான், இசக்கி அம்மன், பிராமணக் கன்னிகை, நீலராசன், மாடன் தம்புரான், ஊர்முன்னோர் ராமகிருஷ்ணன் போற்றி, காலசுவாமி, பேச்சியம்மன், சுடலைமாடன், சுடலைமுண்டன், பலவேசக்காரன், குலைவாழை இசக்கியம்மன், காளிமுத்து வாதை, ஒற்றைசடை இசக்கியம்மன், கடுவாமூர்த்தி வாதை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.